For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

1000 கோடிக்கு போலி செக் கொடுத்த அபூர்வ ஆதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி... மாதிரி பிராடு மன்னன் ஆதிமூலம் கடந்த பல ஆண்டுகளாக ரூ. 1,000 கோடியளவுக்குபோலி செக்குகளைக் கொடுத்து மோசடி செய்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

வெளிநாட்டு இந்தியர்களிடம் கோடிக்கணக்கில் கடன் வாங்கித் தருவதாகக் கூறி முன் பணமாக பலரிடம் லட்சக்கணக்கில் கமிஷன் வாங்கியஆதி, பின்னர் அவர்களுக்கு கடன் தருவதாக சொல்லி செக்குகளைக் கொடுத்துள்ளான்.

வங்கியில் பணமே இல்லாமல் திரும்பி வந்த அந்த நூற்றுக்கணக்கான செக்குகளில், இவன் எழுதிய பணத்தின் மதிப்பு ரூ. 1,000 கோடிக்குமேல் ஆகும்.

இந் நிலையில் ஆதிகேசவனின் வீட்டில் நேற்று இரண்டாவது முறையாக தனிப்படை போலீசார் ரெய்ட் நடத்தினர். அந்த வீட்டையும்போலீசார் தங்களது கண்காணிப்பில் வைத்துள்ளனர்.

அதே போல ஆதி கேசவன் தற்போது போலீஸ் காவலில் உள்ளார். அவரிடம் தீவிரமாக நடந்து வரும் விசாரணையின் அடிப்படையில்அவரது கூட்டாளிகள் ஒவ்வொருவராக பிடிபட்டு வருகின்றனர்.

ஆதிகேசவனின் கூட்டாளிகளான மிகிர், ஆதியின் அண்ணன் மகனான சிவக்குமார், ஆயில் பாண்டியன் ஆகியோரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களது வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தி ஆவணங்களைக் கைப்பற்றினர்.

இதில் மிகிர், ராஜஸ்தானைச் சேர்ந்த மார்வாடி இளைஞராவார். இவரது வீட்டில் இருந்து ஆதிகேசவனின் பல கோடி மதிப்புள்ளசொத்துக்களின் ஆவணங்கள் சிக்கின. மிகிர் உள்பட பலரது பெயரில் பினாமியாக கோடிக்கணக்கில் சொத்துக்களை வளைத்துப்போட்டுள்ளார் ஆதி கேசவன்.

இந்த மிகிர் மூலம்தான் வட இந்தியர்கள் பலரை "மொட்டை" அடித்துள்ளார் ஆதி.

மற்றொரு முக்கியக் கூட்டாளியான ஜெயவீரன் என்பவர் கோடிக்கணக்கான ரூபாய் பணத்துடன் மும்பைக்குத் தப்பி ஓடி விட்டதாகக்கூறப்படுகிறது.

ஜெயவீரனைப் பிடித்தால் ஆதி கேசவனின் அத்தனை மேட்டர்களும் வெளியாகும் என்பதால் ஜெயவீரனைப் பிடிக்க ஒரு போலீஸ் குழுமும்பைக்கு விரைந்துள்ளது.

ஆதிகேசவனிடம் தொழிலதிபர்கள் மாத்திரமின்றி பல அரசியல்வாதிகளும் ஏமாந்துள்ள விவரம் இப்போது வெளியில் வரஆரம்பித்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த ஒரு காங்கிரஸ் பிரமுகரும் ஆதியிடம் கோடிக்கணக்கில் கடன் வாங்க நினைத்து முன் பணமாக பலலட்சங்களை இழந்துள்ளார்.

மோசடி மன்னனான ஆதிக்கு தெய்வ பக்தி ரொம்ப ஜாஸ்தியாம், தினமும் ஒரு மணி நேரம் தனது பூஜை அறையில் கூடை கூடையாய்பூக்களைக் கொட்டி பூஜை செய்துவிட்டுத் தான் தனது பிராடுத்தனத்தையே ஆரம்பிப்பாராம்.

மேலும் பலர் புகார்:

இதற்கிடையே ஆதி தங்களை ஏமாற்றி விட்டதாக 4 தொழிலதிபர்கள் போலீஸில் புகார் கொடுத்துள்ளனர்.

இதற்கிடையே சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜ்மோகன் என்பவர் இன்று மத்தியக் குற்றப் பிரிவு போலீஸில் ஒரு புகார்கொடுத்துள்ளார். அதில், ரூ. 7 கோடி கடன் வாங்கித் தருவதாக கூறி ரூ. 75 லட்சத்தை கமிஷன் என்ற பெயரில் ஆதிகேசவன் வாங்கிக்கொண்டு மோசடி செய்து விட்டதாக கூறியுள்ளார்.

அண்ணா நகரைச் சேர்ந்த ரத்தினசபை என்ற தொழிலதிபர் தன்னிடம் ஆதி ரூ. 17 லட்சம் அளவுக்கு மோசடி செய்து விட்டதாக புகார்கொடுத்துள்ளார். அதேபோல, திண்டுக்கல்லைச் சேர்ந்த லட்சுமிபதி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் புகார் கூறியுள்ளனர்.

ஆதியால் மோசடி செய்யப்பட்டவர்கள் ஒவ்வொருவராக வெளியே வரத் தொடங்கியுள்ளதால் இந்த வழக்கு மேலும்விஸ்வரூபமெடுக்கும் என்று தெரிகிறது.

இதற்கிடையே, ஆதி கேசவனின் வீட்டில் ஏற்கனவே லட்சகணக்கான மதிப்புள்ள நகைகளைப் போலீஸார் பறிமுதல் செய்துள்ள நிலையில்கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைகளை அவர் வங்கி லாக்கர்களில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரது வங்கிலாக்கர்களைத் திறந்து பார்க்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

இதேபோல, வெளிநாடுகளிலும் பல்வேறு வங்கிகளில் ஆதிகேசவன் பணம் போட்டு வைத்துள்ளார். அந்தக் கணக்குகளையும் ஆராய்ந்துவருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X