தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!
சென்னை: சென்னையில் பள்ளி கட்டட திறப்பு விழாவின்போது மாநகராட்சி மேயர் பிரியா குத்துவிளக்கு ஏற்றினார். அதன்பிறகு அவர் அருகே நின்ற திருவிக நகர் சட்டசபை தொகுதியின் தவெக எம்எல்ஏ பல்லவியிடம் மெழுகுவர்த்தியை கொடுக்க மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் கோபமான தவெக எம்எல்ஏ பல்லவி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சென்னை மாநகராட்சி மேயராக பிரியா உள்ளார். இவர் திமுகவை சேர்ந்தவர். தமிழக சட்டசபை தேர்தலில் திமுகவை வீழ்த்தி தவெக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. தவகெ தலைவர் விஜய் முதல்வராக பதவியேற்றுள்ளார். விஜய் முதல்வராகி 25 நாட்கள் ஆகும் நிலையில் இன்று வரை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா சந்திக்காமல் உள்ளார்.

இந்நிலையில் தான் இன்று சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சென்னை திருவிக நகர் சட்டசபை தொகுதியின் எம்எல்ஏவான பல்லவியுடன் மாநகராட்சி பள்ளியின் புதிய கட்டட திறப்பு விழாவில் பங்கேற்றார். அப்போது தவெக எம்எல்ஏ பல்லவிக்கும், மேயர் பிரியாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்ட வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.
Video: தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!
அதாவது சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட திருவிக சட்டசபை தொகுதிக்குள் வரும் புளியந்தோப்பு பகுதியில் உருது நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் புதிய கட்டம் கட்டப்பட்டு உள்ளது. இந்த கட்டத்தை இன்று மாநகராட்சி மேயர் பிரியா ரிப்பன்வெட்டி திறந்து வைத்தார். இந்த விழாவில் திருவிக நகர் சட்டசபை தொகுதியின் எம்எல்ஏ பல்லவி பங்கேற்றார். அப்போது அவரை மேயர் பிரியா கண்டுக்கொள்ளவில்லை. அதன்பிறகு பள்ளி கட்டத்தின் உள்ளே குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.
முதலில் மேயர் பிரியா மெழுகுவர்த்தியை பயன்படுத்தி குத்துவிளக்கேற்றினார். அதன்பிறகு குத்துவிளக்கு ஏற்றுவதற்கான மெழுதுவர்த்தியை, தவெக எம்எல்ஏ பல்லவி கேட்டார். ஆனால் மேயர் பிரியா அவரிடம் கொடுக்காமல் ஐஏஎஸ் அதிகாரியான மாநகராட்சியின் இணை ஆணையர் கற்பகத்திடம் வழங்கி குத்துவிளக்கு ஏற்றும்படி கூறினார். இதனால் அவமானப்படுத்தப்பட்டதாக நினைத்து கோபமடைந்த தவெக எம்எல்ஏ பல்லவி அங்கிருந்து வெளியேறினார். பல்லவியை மாநகராட்சி அதிகாரிகள் சமாதானம் செய்தும் அவர் கேட்கவில்லை. இதுதொடர்பான வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications