2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்!
சென்னை: அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகிய கையோடு இப்போது புதிய அரசியல் இயக்கத்தை ஆரம்பித்துள்ளார். அவர் 2031 தேர்தல் தான் நமது இலக்கு எனச் சொன்னாலும் கூட அதுவரை அண்ணாமலை பொறுமையாக இருக்க வாய்ப்பு குறைவு என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள். அவர் விரைவிலேயே தேர்தல் களத்தில் இறங்குவார் என்றும் சொல்லப்படுகிறது.
பாஜகவில் இருந்து விலகியுள்ள அண்ணாமலை இப்போது புதிதாக அரசியல் இயக்கத்தைத் தொடங்கியுள்ளார். இளைஞர்களுக்கு அரசியல் பயிற்சி அளிக்கப் போவதாகக் கூறியுள்ள அண்ணாமலை, 2031ம் ஆண்டு தேர்தலில் களமிறங்கப் போவதாகவும் கூறியிருக்கிறார். அதுவரை பல்வேறு தரப்பினரையும் ஒருங்கிணைத்து புதிய இயக்கத்தை வலுப்படுத்தப் போவதாகக் கூறியுள்ளார்.

அண்ணாமலை
இருப்பினும், அண்ணாமலை 2031 தேர்தல் வரை பொறுமையாகக் காத்திருக்கத் தயாராக இல்லை என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். இதுபோல நீண்ட கால முடக்கம் தன் அரசியல் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக மாறும் என்பதால், தமிழ்நாட்டில் விரைவில் வரவிருக்கும் 5 தொகுதி இடைத்தேர்தலிலேயே அவர் நேரடியாகக் களம் இறங்கலாம் எனச் சொல்லப்படுகிறது.
இடைத்தேர்தல்
அண்ணாமலைக்கு மட்டுமல்லாமல், அவருடைய தீவிர ஆதரவாளர்களுக்கும் இந்த இடைத்தேர்தல் ஒரு பெரிய அக்னிப் பரீட்சையாக அமையப் போகிறது. அண்ணாமலை மட்டும் போட்டியிடாமல், அவருடைய தீவிர விசுவாசிகளையும் இந்த ஐந்து தொகுதிகளிலும் களம் இறக்க அவர் வியூகம் வகுத்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் தன் புதிய அணியின் பலத்தையும், மக்கள் மத்தியில் தனக்கு இருக்கும் செல்வாக்கையும் ஒரே நேரத்தில் நிரூபித்து, அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளுக்குத் திட்டமிட்டு வருகிறார்.
அண்ணாமலையின் அடுத்த திட்டம் என்றால் அது 2029 லோக்சபா தேர்தல் தான். அந்தத் தேர்தலில் தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக ஒரு வலுவான மூன்றாவது கூட்டணியை உருவாக்க அவர் தீவிரமாகச் செயல்படுவார் என நம்பப்படுகிறது. அண்ணாமலை அமைக்கவுள்ள இந்த புதிய கூட்டணியில்.. திராவிட அரசியல் சித்தாந்தத்திற்கு எதிராகத் தனிப் பாதை வகுக்கும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கணிசமான வாக்கு வங்கியை வைத்துள்ள அமமுகவின் டிடிவி தினகரன், வட மாவட்டங்களில் செல்வாக்கு மிக்க பாமக ஆகிய கட்சிகள் இணையலாம் எனச் சொல்லப்படுகிறது.
கூட்டணி கணக்குகள்
மற்றொரு புறம், தமிழக அரசியல் களத்தில் மற்றுமொரு பெரும் சக்தியாக உருவெடுத்துள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் பக்கமும் புதிய கூட்டணிக் கணக்குகள் உதயமாகி வருகின்றன. விஜய்யின் அணுகுமுறை மற்றும் கொள்கைகள் காரணமாக, ஏற்கனவே காங்கிரஸ் அக்கட்சியின் கூட்டணியில் இணைந்துவிட்டது. விசிக மற்றும் முஸ்லீம் லீக் விஜய் அமைச்சரவையில் பங்கெடுத்துள்ளன. வைகோவின் மதிமுகவும் சீக்கிரமே தவெக பக்கம் போகலாம்.. இடதுசாரிகளும் கூட வெளியில் இருந்து தவெக ஆட்சிக்கு ஆதரவு கொடுத்து வருகிறது.
மாறிய களம்
இதுவரை திமுக கூட்டணியில் பயணித்த இந்தக் கட்சிகள், விஜய்யின் புதிய எழுச்சியைப் பயன்படுத்தி தங்களின் அரசியல் எதிர்காலத்தை உறுதி செய்ய அவர் பக்கம் சாய்ந்தால், அது தமிழகத்தின் ஒட்டுமொத்தக் கூட்டணி அமைப்பையே தலைகீழாக மாறியுள்ளது. இந்த மெகா மாற்றங்களால் திமுகவும், அதிமுகவும் தங்களின் வழக்கமான கூட்டணிகளை இழந்து தனித்துவிடப்படப்பட்டுள்ளது. விஜய் தலைமையில் ஒரு கூட்டணி, அண்ணாமலை தலைமையில் மற்றொரு கூட்டணி என உருவாகும்போது, வாக்குகள் பல மடங்கு பிரியும் என்பதில் சந்தேகமில்லை.












Click it and Unblock the Notifications