தமிழக வாக்காளர்கள் தெளிவானவர்கள்: ப.சிதம்பரம்
கும்மிடிப்பூண்டி:
தமிழக வாக்காளர்கள் தைரியமானவர்கள், யாருக்கு ஓட்டுப் போட வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பவர்கள் என்று மத்தியநிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.
கும்மிடிப்பூண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் வெங்கடாசலபதிக்கு ஆதரவாக ப.சிதம்பரம் பிரசாரத்தில் ஈடுபட்டார்.ஊதுக்கோட்டை நேரு பஜார் பகுதியில் அவர் பேசுகையில்,
கடந்த 35 ஆண்டுகளாக, தமிழக மக்களின் ஆதரவு பெற்ற கூட்டணியின் ஆட்சிதான் மத்தியிலும் ஆட்சி அமைத்து வருகிறது.தமிழக மக்கள் அந்த அளவுக்கு தெளிவானவர்கள். தமிழக வாக்காளர்களுக்கு நல்லது எது, கெட்டது எது, யாருக்கு ஓட்டுப்போடலாம், யாரைப் புறக்கணிக்க வேண்டும் என்பதை சொல்லிக் கொடுக்கத் தேவையில்லை. அவர்களுக்கே அது தெரியும்.
தெளிவாவனவர்கள் மட்டுமல்ல, மிகவும் தைரியமானவர்களும் கூட. எந்தவித உருட்டல், மிரட்டல்களுக்கும், சேலை,வேட்டிக்கும், கரன்சிக்கும் மயங்காதவர்கள் தமிழக வாக்காளர்கள்.
தைரியமான தமிழக வாக்காளர்களால்தான் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது.மீண்டும் அதே அணியின் சார்பில் வெங்கடாசலபதி உங்கள் ஆதரவைக் கோரி நிற்கிறார்.
இந்தத் தொகுதிக்கு இடைத் தேர்தல் வந்தது துரதிர்ஷ்டவசமானது. இதை யாரும் மகிழ்ச்சியோடு எதிர் கொள்ளவில்லை.தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்ததால்தான் இந்தத் தொகுதியில் இடைத் தேர்தல் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
கடந்த 11 மாதங்களாக நாங்கள் மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறோம். இதுவரை நாங்கள் செய்த சாதனைகளைஉங்களிடம் சொல்வது எனது கடமை. தமிழகத்திற்கு 9,378 கோடி ரூபாய் விவசாயக் கடன் வழங்கியுள்ளோம். 38,461மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கியுள்ளோம். சுனாமி நிவாரண நிதியாக ரூ. 5,018 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது.
காவல்துறையை இங்கு தவறாகப் பயன்படுத்துகிறார்கள். என்கெளண்டர் என்ற பெயரில் சுட்டுத் தள்ளுகிறார்கள். கஞ்சா வழக்கு,மோசடி வழக்கு, என வழக்குகளைப் போட்டுத் தள்ளுகிறார்கள்.
ஆளும்கட்சிக்கு ஆதரவாக ஆட்டம் போட்ட காவல்துறை அதிகாரிகள் முத்துக் கருப்பன், முகம்மது அலி ஆகியோருக்கு நேர்ந்தகதியை காவல்துறையினர் நினைத்துப் பார்த்து முறையாக நடந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.
தேர்தல் சிறப்புப் பார்வையாளர் கே.ஜே.ராவ் சிறப்பாக செயல்படுகிறார். இதைப் பார்க்போது, தேர்தல் சிறப்பாகவும்,நேர்மையாகவும் நடைபெறும் என்று நம்பிக்கை பிறந்திருக்கிறது என்றார் ப.சிதம்பரம்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications