குடும்பம் தள்ளிவைப்பு: பாதிரியார் மீது புகார்
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடி கிராம பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில் ஊர்கட்டுப்பாட்டை மீறி போட்டியிட்டபெண்ணையும், அவரது குடும்பத்தாரையும் கிராம சபை நிர்வாகிகள் ஊரை விட்டுத் தள்ளி வைத்துள்ளனர். இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த டிசம்பரம் மாதம் வீசிய சுனாமி அலைத் தாக்குதலில் மேல் மணக்குடி, கீழ் மணக்குடி ஆகியஇரு கிராமங்களையும் உள்ளடக்கிய மணக்குடி பஞ்சாயத்துத் தலைவி மேரியும் பலியானார்.
இதையடுத்து கடந்த 19ம் தேதி நடந்த இடைத் தேர்தலின்போது, மணக்குடி பஞ்சாயத்துத் தலைவராக டென்னிஸிலின் என்பவர்வெற்றி பெற்றார்.
தேவாலயத்தின் ஆதரவோடு போட்டியிடும் டென்னிஸிலினுக்கு ஆதராக தங்கத்தை போட்டியிலிருந்து வாபஸ் பெறுமாறு மேல்மணக்குடி தேவலாய பங்குத் தந்தை பொனோராஜ் மற்றும் கிராம சபை நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் தங்கம்மறுத்துவிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது தங்கம் மற்றும் அவரது குடும்பத்தினரைஊரை விட்டு தள்ளி வைத்துள்ளனர். அத்தோடு ரூ. 15,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தங்கம் கூறுகையில், தேவாலய பங்குத் தந்தையும், ஊர் மக்களும் சேர்ந்து என்னை திட்டமிட்டு பழி வாங்கிவிட்டார்கள். நாங்க ஊர் விலக்கம் செய்யப்பட்டதால் இனி, எனது கணவர் ஊர்க்காரர்களுடன் சேர்ந்து மீன் பிடிக்க செல்லமுடியாது, எனது குழந்தைகளுக்கு தேவாலயத்தில் ஞானஸ்தானம் செய்ய மாட்டார்கள்.
எனக்குக் கிடைக்க வேண்டிய சுனாமி நிவாரணத் தொகையையும் தடுக்க பங்குத் தந்தை முயற்சித்து வருகிறார். எங்களதுகுடும்பத்தினருக்கு கல்லறைத் தோட்டத்திலும் இடம் கொடுக்க மாட்டார்கள். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கூட என்னிடம்பேசுவதில்லை, கடைகளில் பொருட்கள் கொடுக்கவும் மறுக்கிறார்கள்.
பங்குத் தந்தைதான் இத்தனை பிரச்சினைகளுக்கும் காரணம். அவரைப் பகைத்துக் கொள்ள யாரும் தயாராக இல்லை என்றார்தங்கம்.
தங்கத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தஉத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாக மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.
ஒரு பக்கம் மரத்தடி பஞ்சாயத்து குரூப்கள் அடிவாங்கிய பித்தளை சொம்பை வைத்துக் கொண்டு நாட்டாமை எனற பெயரில்காட்டுமிராண்டி தீர்ப்புகள் கொடுத்து வரும் நிலையில், மக்களை நல் வழிப்படுத்த வேண்டிய ஸ்தானத்தில் இருக்கும் பங்குத்தந்தை தேவையில்லாமல் அரசியல் செய்து ஒரு குடும்பத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கிறார்.
பங்குத் தந்தைக்கு அரசியல் எதற்கு?
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications