ஆண்களை விஞ்சும் பெண்கள் எண்ணிக்கை: கருக்கலைப்பில் சென்னை முதலிடம்!!
சென்னை:
தமிழ்நாட்டில் கல்வியறிவில் கன்னியாகுமரி மாவட்டம் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்து வருகிறது.
தேசிய மற்றும் தமிழக அளவில் பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், தூத்துக்குடி உட்பட 14 தமிழகமாவட்டங்களில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக உள்ளனர்.
தமிழகத்தில் 6.40 கோடி மக்கள் உள்ளனர். உலகளவில் 1,000 ஆண்களுக்கு 990 பெண்களும், இந்தியாவில் 993 பெண்களும்,தமிழகத்தில் 987 பெண்களும் உள்ளனர்.
தஞ்சாவூரில் 1021 பெண்களும், புதுக்கோட்டையில் 1,015 பெண்களும், நாகை, திருவாரூர், காஞ்சிபுரம், நீலகிரி ஆகியமாவட்டங்களில் 1,014 பெண்களும், விருதுநகரில் 1,012 பெண்களும், கரூரில் 1,010 பெண்களும், பெரம்பலூரில் 1,006பெண்களும், திருச்சியில் 1,001 பெண்களும் உள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் தான் ஆண்களை விட பெண்கள் குறைந்த எண்ணிக்கையில் (929) உள்ளனர். இதற்கு அடுத்ததாக தர்மபுரி,கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் தலா 938 பெண்கள் உள்ளனர்.
பெண் சிசுக்கொலை காரணமாகத் தான் இந்த மாவட்டங்களில் பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது சமீபத்தியகணகெடுப்பில் தெரியவந்துள்ளது.
கருக்கலைப்பில் சென்னை முதலிடம்:
அதே போல கருக்கலைப்பில் சென்னை முதலிடத்தை பெற்றுள்ளது. கடந்த ஆண்டில் சென்னையில் 13,824 கருக்கலைப்புகள்நடந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக சேலம் மாவட்டத்தில் 6,710 கருக்கலைப்புகள் நடந்துள்ளன. இது கணக்கில் வந்துள்ளகருக்கலைப்புகள் எண்ணிக்கை தான். கணக்கில் இல்லாமல் இதைப் போல மேலும் சில மடங்கு கருக்கலைப்புகள்நடந்திருக்கலாம்.
கல்வி அறிவை பொறுத்த வரை கன்னியாகுமரி மாவட்டம் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்து வருகிறது. இம்மாவட்டத்தில்88.11 சதவீதம் பேர் கல்வி அறிவு பெற்றுள்ளனர். ஆண்களில் 90.88 சதவீதமும், பெண்களில் 85.38 சதவீதம் பேரும்இம்மாவட்டத்தில் கல்வி அறிவு பெற்றுள்ளனர்.
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 59.23 சதவீதம் பேர் மட்டுமே கல்வி அறிவு பெற்றுள்ளனர். இந்த இரு மாவட்டங்கள் தான்தமிழகத்தில் கல்வியறிவு குறைந்த மாவட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications