தலைமறைவான டிஎஸ்பி மணிரத்னம் பிடிபட்டார்
பவானிசாகர்:
தலைமறைவான ஓமலூர் டி.எஸ்.பி மணிரத்னம் பவானி சாகரில் கண்டுபிடிக்கப்பட்டார். இவர் உடனடியாக சென்னைக்குஅழைத்து செல்லப்பட்டார்.
சேலம் மாவட்டத்தின் ஓமலூர் டி.எஸ்.பியாக இருந்தவர் மணிரத்னம். இவர் சேலம் எஸ்.பியாக இருந்த பொன் மாணிக்கவேல்மீது பல குற்றச்சாட்டுகளைக் கூறிவிட்டு தலைமறைவானார்.
தலைமறைவாக இருந்தபடியே உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு ஏராளமான கடிதங்களையும் அவர் எழுதியிந்தார். அதில் பொன்மாணிக்கவேல் தன்னை வேலைப் பளுவால் சித்திரவதை செய்ததாகவும், அவமானப்படுத்தும் வகையில் நடத்தியதாகவும்சரமாரியான புகார்களைத் தெரிவித்திருந்தார்.
மணிரத்னத்தின் குற்றச்சாட்டையடுத்து பொன்.மாணிக்கவேல் மாற்றப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் 23 காணாமல் போன மணிரத்னத்தைக் கண்டுபிடிக்க 19 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தமிழகம் முழுவதும்அவரை போலீசார் தேடி வந்தனர்.
இந் நிலையில் டி.எஸ்.பி. மோகன் நவாஸ் தலைமையிலான தனிப்படை போலீஸாரிடம் மணிரத்னம் இன்று அதிகாலை சிக்கினார்.ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அருகே மணிரத்னத்தை தனிப்படை போலீஸார் பிடித்தனர்.
அவர் கார் மூலம் சென்னைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இன்றிரவு அவர் டிஜிபி முன் ஆஜர்படுத்தப்படுகிறார்.
இதன் பின்னரே, மணிரத்னம் மீதான நடவடிக்கை குறித்துத் தெரிய வரும். மணிரத்னம் பிடிபட்டுள்ளதைத் தொடர்ந்துகாவல்துறையை கலக்கிய சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications