ஒப்பாரி வைத்து ஓட்டு கேட்கும் ஜெ: துரைமுருகன் தாக்கு
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஜெயலலிதாவின் எடுபிடியா? என்று முன்னாள் திமுக அமைச்சர் துரைமுருகன் கேள்விஎழுப்பினார்.
காஞ்சிபுரம் வணிகர் வீதியில் காங்கிரஸ் சார்பில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் துரைமுருகன்பேசுகையில், நாம் ஒன்று சேர்ந்து லோக் சபா தேர்தலில் 40 இடங்களைப் பெற்றோம். அந்த தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாகவாஜ்பாய் கட்சி இருந்தது.
அமாவாசைக்கு ஒருமுறை அமைச்சர்களை மாற்றுகிறார். மறைந்த திருநாவுக்கரசுக்கு அமைச்சர் பதவி கொடுத்தார். பின் ஏன்அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கினீர்கள்? அவர் திறமை இல்லாதவரா? அல்லது லஞ்ச லாவண்யத்தில் சிக்கியிருந்தால்அதை வெளிப்படையாக கூற வேண்டும்.
அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியதால் நோய் வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்து போனார்.அப்போது யாராவது போய் அவரை பார்த்ததுண்டா? இறந்த பின் அவருக்கு மாலையாவது வைத்ததுண்டா? இன்று ஒப்பாரிவைத்து ஓட்டு கேட்க வருகிறீர்கள்.
எங்கள் அணியினர் சட்டத்துக்கு கட்டுப்பட்டவர்கள். எங்கள் கட்சிக் கொடியை மட்டும் ஓடி ஓடி அறுக்கிறீர்கள். நாங்கள் கொடிகட்டாமல் இருக்க வேண்டுமென்றால் வேறு எந்தக் கட்சியும் கொடி கட்டக் கூடாது. அதிமுக கொடியை எந்த போலீஸாவதுஅறுத்ததுண்டா?
காஞ்சிபுரத்தை விட்டு நாங்கள் வெளியேற வேண்டும் என்கின்றனர். இது ஜனநாயக நாடு. எனது கட்சிக்கு பிரசாரம் செய்ய எனக்குஉரிமை கிடையாதா? எங்களை வெளியேறச் சொல்லும் அதிகாரிகளுக்கு அமைச்சர்களை வெளியேறச் சொல்லும் யோக்கியதைஉண்டா?
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஜெயலலிதாவின் எடுபிடியா? அவருக்கு ஒன்றை தெரிவித்துக் கொள்கிறேன். ஆட்சி மாற்றம்அடுத்த ஆண்டு அல்ல. 16ம் தேதி இரவில் ஏற்படும். இந்த ஆட்சி நீண்ட நாள் நீடிக்காது. எனவே தேர்தலை நேர்மையாகநடத்துங்கள் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications