சொத்து குவிப்பு: ஜெ தரப்புக்கு நீதிபதி கடும் கண்டனம்
பெங்களூர்:
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.ஆனால், மாஜி வளர்ப்பு மகன் சுதாகரன் தவிர ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட மற்ற 4 பேரும் இன்றும் ஆஜராகவில்லை.
மேலும் வழக்கு விசாரணையை வரும் 16ம் தேதிக்கு ஒத்தி வைக்குமாறு (காஞ்சி, கும்மிடிப்பூண்டி இடைத் தேர்தல் முடிவுகள்வெளியாகும் நாள்) நீதிபதியிடம் ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்தனர். இதை முதலில் ஏற்க மறுத்த நீதிபதி,பின்னர் நீண்ட வாதத்துக்குப் பின் 16ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
(இதனால் தேர்தல் முடிந்து முடிவு வெளியாகும் வரை ஜெயலலிதா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய அவசியம் இல்லை.முன்னதாகவே நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியிருந்தால் தேர்தல் முடிவை அது பாதிக்கலாம் என்பதால் ஜெயலலிதா தரப்பில்இவ்வாறு வாதம் செய்யப்பட்டதாகத் தெரிகிறது)
ரூ. 66 கோடி சொத்து குவித்தது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா, சசகிலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதும், திடீர்பணக்காரராகி லண்டனில் ஹோட்டல் வாங்கியது தொடர்பாக தினகரன் மீதும் இரு சொத்துக் குவிப்பு வழக்குகள் பெங்களூர் தனிநீதிமன்றத்தில் நடந்து வருகின்றன.
ஆனால், இந்த வழக்கு விசாரணையில் சுதாகரனைத் தவிர மற்ற நால்வரும் ஆஜாரகாமல் சாக்குபோக்கு கூறி வருகின்றனர். இதைகடந்த ஏப்ரல் 18ம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது சுட்டிக் காட்டிய நீதிபதி, பச்சாபூரே கடும் கண்டனம் தெரிவித்தார்.
பின்னர் வழக்கு விசாரணையை மே 9ம் தேதிக்கு (இன்று) தள்ளி வைத்த அவர், அன்றைய தினம் குற்றம் சாட்டப்பட்டுள்ளஅனைவரும் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.
அதன்படி இன்று மீண்டும் விசாரணை நடைபெற்றது. இம்முறை ஜெயலலிதாவின் சார்பில் வழக்கறிஞர் ஜோதியுடன் உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரான கே.டி.எஸ். துள்சியும் ஆஜரானார். இவர் தான் சங்கரராமன் கொலை வழக்கில்ஜெயேந்திரருக்கு எதிராக போலீஸ் தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞராவார்.
இன்று நீதிமன்றம் கூடியதும் பேசிய துள்சி, முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட முக்கிய பணிகளில் இருப்பதால்ஆஜராகவில்லை என்று தெரிவித்தார்.
அதேபோல ஜெயலலிதாவுடன் சசிகலாவும், தினகரனும் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருப்பதால் அவர்கள் சார்பிலும் நேரில் ஆஜராகவிலக்கு அளிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனால் சுதாரகன் மட்டுமே ஆஜரானார். ஆனால், ஜெயா டிவியை நிர்வகித்து வரும் இளவரசி ஆஜராகவில்லை. அவர் சார்பிலும்வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
3 மணி நேரம் துள்சி வாதம்:
பின்னர் பேசிய துள்சி, மேலும் லண்டன் ஹோட்டல் வழக்கையும், சொத்துக் குவிப்பு வழக்கையும் தனித்தனியாக நடத்தாமல் ஒரேவழக்கமாக நடத்த வேண்டும் என்று கோரும் ஜெயலலிதா, தினகரனின் மனுக்கள் மீது துள்சி வாதம் செய்தார்.
சுமார் 3 மணி நேரம் பல்வேறு சட்ட பாயிண்டுகளை எடுத்து வைத்துப் பேசினார் துள்சி. அவர் கூறுகையில்,
இந்த இரு வழக்குகளையும் தனித் தனியாகப் பிரித்து போலீசார் (திமுக ஆட்சியில்) வழக்குப் பதிவு செய்தது சட்ட விரோதமான,நியாமற்ற செயல். லண்டன் ஹோட்டல் வழக்கில் சாட்சிகளாக, சொத்துக் குவிப்பு வழக்கின் சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
ஒரே வழக்கில், ஒரே காலகட்டத்தில் எப்படி இரண்டு தனித் தனி விசாரணைகள் நடத்த முடியும்?. இது எப்படி சட்டப்படிநியாயமாகும் என்று நுணுக்கமான சட்ட பாயிண்டுக்களை எடுத்து வைத்து, புகுந்து விளையாடினார் துள்சி.
அவர் மேலும் பேசுகையில், இந்த வழக்கை இரண்டாகப் பிரிந்தது குற்றம் சாட்டப்பட்டவர்களை தொல்லைப்படுத்தவும்,துன்புறுத்தவும் தான். சொத்துக் குவிப்பு வழக்கின் குற்றப் பத்திரிக்கையின் ஒரு பகுதியாகத் தான் லண்டன் ஹோட்டல் வழக்கின்குற்றப் பத்திரிக்கையை நீதிமன்றம் கருத வேண்டும்.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டால், லண்டன் ஹோட்டல் வழக்கு தொடர்ந்து கொண்டிருக்கும். அவரைதொல்லைப்படுத்துவதற்காகவே இவ்வாறு திட்டமிட்டு இரு வேறு வழக்குகளாகப் பதிவு செய்துள்ளார். இதைத் தவிர்க்க இருவழக்குகளையும் ஒன்றாக இணைத்தே நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்றார்.
மேலும் தனக்கு கேரள உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகள் உள்ளதால் ஜெயலலிதாவின் வழக்கை மே 16ம்தேதிக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்றார்.
நீதிபதி கோபம்:
இதைக் கேட்டு கோபமடைந்த நீதிபதி பச்சேபுரே, அந்தக் கேரிக்கையை ஏற்க மறுத்தார். நீதிபதி கூறுகையில், இன்று முதல் இந்தவழக்கின் விசாரணை தினமும் நடக்க இருந்தது. இந்த வழக்கு வருடக்கணக்கில் இழுத்தடிக்கப்பட்டுவிட்டது. இதைப் பார்த்துமக்கள் எரிச்சலடைந்துள்ளார்கள் என்றார்.
அப்போது பேசிய ஜெயலலிதாவின் இன்னொரு வழக்கறிஞரான ஜோதி, இந்த விஷயத்தில் நீதிமன்றம் விட்டுக் கொடுத்து நடந்துகொள்ள வேண்டும் என்றார்.
இதையடுத்து மதிய உணவு இடைவேளைக்காக நீதிமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது. 3 மணிக்கு மீண்டும் நீதிமன்றம் கூடியதும்,வழக்கை மே 16ம் தேதிக்கு ஒத்தி வைக்கக் கோரி துள்சியும் ஜோதியும் மீண்டும் வாதம் செய்தனர். மேலும் மே 16ம் தேதி முதல்இந்த வழக்கை தினந்தோறும் நடத்த ஒத்துழைப்பதாகவும் கூறினர்.
ஏற்க மறுத்த நீதிபதி:
ஒரு கட்டத்தில் படு எரிச்சலடைந்த நீதிபதி, உங்களது கோரிக்கையை ஒரு மனுவாக தாக்கல் செய்யுங்கள். நான் அதை விசாரித்துமுடிவெடுக்கிறேன் என்றார்.
ஆனால், அதை துள்சியும் ஜோதியும் ஏற்கவில்லை. வழக்ககை ஒரு வாரத்துக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்றனர்.
அப்போது இடைமறித்த நீதிபதி, நான் கடந்த 6 மாதங்களாக சும்மா உட்கார்ந்து இருக்கிறேன். இப்படியே ஒத்தி வைத்துக்கொண்டே போனால் வழக்கை எப்போது விசாரித்து முடிப்பது? என்றார்.
இதையடுத்து தாங்கள் வேறு சில வழக்குகளில் ஆஜராக வேண்டியுள்ளதாகவும், இதனால் 16ம் தேதிக்கு முன் இந்த வழக்கில்ஆஜராக முடியாது என்றும் துள்சியும் ஜோதியும் கூறினர்.
இதை ஏற்க மறுத்த நீதிபதி, நீங்கள் மற்ற வழக்குகளில் ஆஜராக வேண்டாம். இங்கே ஆஜராகுங்கள் என்றார்.
வழக்கு ஒத்திவைப்பு:
ஆனாலும் மீண்டும் மீண்டும் தங்கள் கோரிக்கையை வைத்து துள்சியும் ஜோதியும் வலியுறுத்தவே, கடும் எரிச்சலடைந்த நீதிபதி,அவர்களது கோரிக்கையை ஏற்பதாக அறிவித்து, வழக்கை ஒத்தி வைத்துவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications