அதிமுகவுக்கு ஆதரவாக ரஜினி, விஜய்காந்த் ரசிகர்கள் பிரச்சாரம்
காஞ்சி & கும்மிடிப்பூண்டி:
காஞ்சிபுரம் மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதிகளில் அதிமுகவுக்கு ஆதரவாக ரஜினி, விஜய்காந்த் ரசிகர்கள் பெருமளவில்பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்தத் தொகுதிகளின் பொறுப்பாளர்களான அமைச்சர்களைச் சந்திக்கும் ரஜினி, விஜய்காந்த் மன்றத்தினர் தங்களது ஆதரவைத்தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து அவர்கழையும் பிரச்சாரத்தில் உடன் அழைத்துச் செல்ல அதிமுகவினருக்கு அமைச்சர்கள்உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இதனால் தொகுதியில் ரஜினி படம் போட்ட பனியன், ரஜினியின் பேனர்களுடனும் விஜய்காந்த் படம், மன்றக் கொடியுடனும்ஏராளமான ரசிகர்கள் அதிமுகவினருடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந் நிலையில் காஞ்சி தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா இன்று தனது 2வது கட்டப் பிரசாரத்தைத் தொடங்குகிறார்.
காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி தொகுதிகளில் முதல் கட்டப் பிரசாரத்தை முடித்துள்ள ஜெயலலிதா இன்று தனது இரண்டாவதுகட்டப் பிரசாரத்தை காஞ்சிபுரம் தொகுதியில் மேற்கொள்கிறார்.
டோல்கேட் பகுதியில் பிரசாரத்தைத் தொடங்கும் ஜெயலலிதா, மாமல்லன் நகர், கங்கை கொண்டான் மண்டபம், கச்சேஸ்வரர்சன்னதி வழியாக திருக்காளிமேடு, பல்லவர்மேடு, புதுப்பாளையம் தெரு, தாயார்குளம், செவிலிமேடு, ஐய்யங்கார் குளம்உள்ளிட்ட 7 இடங்களில் பேசுகிறார்.
இதையடுத்து நாளை கும்மிடிப்பூண்டி தொகுதிக்குட்பட்ட 12 ஊர்களில் ஜெயலலிதா பிரசாரம் செய்து பேசுகிறார்.
வாக்குப் பதிவுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. திமுக தலைவர்கருணாநிதி நாளை காஞ்சிபுரத்தில் தனது பிரசாரத்தைத் தொடங்குகிறார்.
நாளை காஞ்சிபுரத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கருணாநிதியும், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் பேசுகிறார்கள்.
அதிமுக பேனர்களுடன் லாரி பறிமுதல்:
இந் நிலையில் காஞ்சிபுரத்தில் ஏராளமான அதிமுக பேனர்கள், கட் அவுட்கள், கொடிகளுடன் வந்த லாரியை அதிகாரிகள்பறிமுதல் செய்தனர்.
தான் சொல்லியதை அலட்சியப்படுத்தும் அதிகாரிகளுக்கு சிறப்புத் தேர்தல் பார்வையாளர் ராவ் கடும் எச்சரிக்கையும் விடுத்துவருவதால், இரு தொகுதிகளிலும் அதிகாரிகள் மிக விழிப்புணர்வுடன் செயல்பட ஆரம்பித்துள்ளனர்.
இந் நிலையில் காஞ்சிபுரம் தொகுதிக்குட்பட்ட டோல்கேட், செட்டித் தெரு பகுதியில் விதிமுறைகளை மீறி சாலையில் கொடிகள்கட்டப்பட்டு வந்தன.
இதையடுத்து அங்கு விரைந்த மாவட்ட கோட்டாட்சியர், காவல்துறைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு,நின்றிருந்த லாரியை பறிமுதல் செய்தனர். அதிலிருந்த அதிமுக பேனர்களையும் கட்டப்பட்டிருந்த பேனர்களையும் அகற்றினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications