"அக்கினிப் பூக்கள்": கும்பகோணம் குழந்தைகள் நினைவாக அறக்கட்டளை
கும்பகோணம்:
கும்பகோணம் பள்ளித் தீ விபத்தில் கருகி இறந்த குழந்தைகளின் நினைவாக, அக் குழந்தைகளின் பெற்றோர் ஒன்றிணைந்துஅக்கினிப் பூக்கள் என்ற அறக்கட்டளையைத் துவக்கியுள்ளனர்.
கடந்த 2004ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி கும்பகோணம் கிருஷ்ணா பள்ளிக் கூடத்தில் ஏற்பட்ட கோர தீ விபத்தில் 94 குழந்தைகள்உயிருடன் எரிந்து சாம்பலாயின.
உலகை உலுக்கிய இச் சம்பவம் நடந்த பள்ளி தற்போது மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது. இங்கு நினைவிடம் அமைக்க வேண்டும்என்று உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கும்பகோணம் கிருஷ்ணவேணி திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் அறக்கட்டளை தொடங்கப்பட்டது. இதன் தலைவராககீதாலயன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இது குறித்த கீதாலயன் கூறுகையில், பலியான 94 குழந்தைகளின் குடும்பத்தினருக்கும் ஏராளமான பண உதவி, பொருள் உதவிகிடைத்தது. அதிலிருந்து ஒரு பகுதியை முதலீடாக வைத்து இந்த அறக்கட்டளையைத் தொடங்கியுள்ளோம்.
ஏழை சிறுவர், சிறுமியருக்கு இந்த அறக்கட்டளை மூலம் நிதியுதவி செய்யவுள்ளோம். இதுதவிர குழந்தைகளுக்காக பல்வேறுதிட்டங்களையும் வைத்துள்ளோம்.
ஜூலை 16ம் தேதி குழந்தைகள் கருகி உயிரிழந்ததன் முதலாமாண்டு நினைவு தினம் வருகிறது. அன்றைய தினம் மகாமககுளத்திலிருந்து பள்ளிக் கூடம் வரை அமைதி ஊர்வலம் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம் என்றார்.
அறக்கட்டளை துவக்க நிகழ்ச்சியில் மறைந்த குழந்தைகளின் பெற்றோர், குடும்பத்தினர் கலந்து கொண்டனர். குழந்தைகள்குறித்து மேடையில் இருந்தவர்கள் பேசப் பேச பல பெற்றோரும் குலுங்கி அழுதனர். அவர்களை ஒருவரை ஒருவர் தேற்றிக்கொண்ட காட்சி கலங்க வைத்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications