பண்ணையார்: நீதிபதி மருமகன் கொலை வழக்கில் 17ம் தேதி தீர்ப்பு
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
வெங்கடேச பண்ணையார் கொல்லப்பட்டது குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட கமிஷனின் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதிராமனின் மருமகன் வெங்கடேசன் திருச்சியில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில், வருகிற 17ம் தேதி திருச்சி விரைவுநீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
கடந்த 2003ம் ஆண்டு சென்னையில் வெங்கடேச பண்ணையார் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்றநீதிபதி ராமன் தலைமையில் ஒரு நபர் கமிஷனை தமிழக அரசு நியமித்தது.
இந்த சம்பவம் தொடர்பாக தேவேந்திர குல இளைஞர் பேரவைத் தலைவர் பசுபதி பாண்டியனின் தம்பி உள்ளிட்ட 8 பேரைபோலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு திருச்சி விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இன்று இறுதிக் கட்டவிசாரணை நடந்தது.
விசாரணைக்குப் பின்னர் வருகிற 17ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அறிவித்தார்.












Click it and Unblock the Notifications