மீண்டும் பணியில் சேர்ந்தார் டி.எஸ்.பி.
சென்னை:
காணாமல் போய் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சேலம் மாவட்டம் ஓமலூர் டி.எஸ்.பி. மணிரத்தினம், மீண்டும் பணியில்சேர்ந்தார்.
வீரப்பனைப் பிடிக்க நியமிக்கப்பட்ட அதிரடிப்படையில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி, வீரப்பன் சுட்டு வீழ்த்தப்பட்டதையடுத்துடி.எஸ்.பியாக பதவி உயர்வு பெற்றவர் மணிரத்தினம். சேலம் மாவட்டம் ஓமலூரில் டி.எஸ்.பியாக பணியாற்றி வந்த இவர், கடந்தஏப்ரல் 23ம் தேதி திடீரென காணாமல் போய் விட்டார்.
இந் நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மணிரத்தினம் கண்டுபிடிக்கப்பட்டார். அவரை ஈரோடு எஸ்.பி.பாலசுப்ரமணியம், சத்தியமங்கலம் டி.எஸ்.பி. மோகன் நிவாஸ் ஆகியோர் சென்னைக்கு அழைத்து வந்தனர். மணிரத்தினத்துடன்அவரது மனைவி தனலட்சுமியும் சென்னைக்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.
பின்னர் டிஜிபி அலுவலகத்திற்கு மணிரத்தினம் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு டிஜிபி அலெக்சாண்டரை மணிரத்தினம்சந்தித்து நடந்த விவரங்கள் அனைத்தையும் விளக்கமாக கூறினார். அதை மிகவும் கவனத்துடன் கேட்டுக் கொண்டார்அலெக்சாண்டர். காலை சந்திப்புக்குப் பின்னர் மாலையில் மீண்டும் மணிரத்தினத்துடன் பேசினார் அலெக்சாண்டர்.
இந்த சந்திப்புக்குப் பின்னர், செய்தியாளர்களிடம் அலெக்சாண்டர் கூறுகையில், காணாமல் போன நாட்களில் பல்வேறுகோவில்களுக்கும், சர்ச்சுகளுக்கும் மணிரத்தினம் சென்றுள்ளார். கடவுள்களை பார்க்க அவர் சென்றுள்ளார்.
என்னைப் பார்க்க வேண்டும் என்று அவர் விரும்பியதால், அவரை இங்கு அழைத்து வர கூறினேன். சேலம் எஸ்.பியை சந்தித்துபணியில் சேருமாறு அவருக்கு அறிவுறுத்தியுள்ளேன். இதற்கு மேல் எதுவும் சொல்வதற்கில்லை. இதுதொடர்பாக தொடர்ந்துவிசாரணை நடந்து வருகிறது என்றார் அலெக்சாண்டர்.
பணியில் சேர்ந்தார்:
இதன் பிறகு இன்று சேலம் வந்த டி.எஸ்.பி. மணிரத்தினம், எஸ்.பி. ஆறுமுகத்தை சந்தித்து பேசினார். இதையடுத்து ஓமலூர் சென்றஅவர், மீண்டும் பணியில் சேர்ந்தார்.
மணிரத்தினம் மீண்டும் வேலையில் சேர்ந்குள்ள போதிலும், அவர் மீது இலாகா பூர்வமான நடவடிக்கை குறித்து விரைவில்அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து எஸ்.பி. ஆறுமுகம் கூறுகையில், மணிரத்தினம் மீண்டும் பழைய பணியிலேயே சேர்ந்துள்ளார். அவருக்குத்தேவையான குவார்ட்டர்ஸ் வசதி, உள்ளிட்டவை ஏற்கனவே செய்யப்பட்டு விட்டது. அவர் மீண்டும் பணியில் சேர்ந்தாலும்,சட்டப்படியான நடவடிக்கைகள், முறைப்படியான விசாரணைக்குப் பின்னர் மேற்கொள்ளப்படும் என்றார் ஆறுமுகம்.
மணிரத்தினம் கூறுகையில், எனது பிரச்சினைகள், நடந்த விவரங்களை உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து விட்டேன். இனிமேல்சுதந்திரமாக, மன நிம்மதியுடன் எனது பணியில் ஈடுபடுவேன் என்றார்.
ஓடிப்போன டிஎஸ்பிக்கு மீண்டும் வேலை
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications