மதுரை: பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து- 8 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரை அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 8 தொழிலாளிகள் உடல் கருகி இறந்தனர். 2 பேர் ஆபத்தானநிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மதுரையை சேர்ந்த கோசல்ராம் என்பவர் பெருங்குடி அருகே உள்ள கொசவப்பட்டியில் பட்டாசு ஆலையை நடத்தி வருகிறார்.ரகுராம் பயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசுத் தொழிற்சாலையில் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர்.

50 அடி இடைவெளியில் அமைந்த 3 அறைகளில் இந்த ஆலை இயங்கி வந்தது. ஒரு அறையில் சல்பர், பொட்டாசியம்,நைட்ரேட், கரித்தூள் கலவைப் பணியும், மற்றொரு அறையில் ராக்கெட் வெடிகளுக்கு மருந்து செலுத்தும் பணியும் நடைபெறும்.3வது அறையில் பட்டாசுகள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும்.

நேற்று மாலை 13 பேர் பணியில் ஈடுபட்டிருந்தனர். மாலையில் 3 பேர் கை கழுவுவதற்காக ஆலையை விட்டு வெளியே வந்தனர்.மற்ற 10 பேர் இரு அறைகளிலாக பணியில் ஈடுபட்டிருந்தனர்.

திடீரென ராக்கெட் வெடிகளுக்கு மருந்து செலுத்தும் அறையில் பலத்த சத்தத்துடன் வெடிகள் வெடித்து சிதறின. அவைசீறிப்பாய்ந்த ராக்கெட்டுகள் அருகிலுள்ள வெடி மருந்துக் கலவை அறையில் விழுந்து வெடித்தன. இதில் இந்த அறைகளில்பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர்.

இதில் வெள்ளைச்சாமி, அறிவு, மீனா, போதும் பொண்ணு, ராக்காயி, ரேவதி, குமரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் கருகிஇறந்தனர். ஞானம்மாள் என்பவர் மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த கரந்தையம்மாள், குப்புசாமி ஆகியோர் கவலைக்கிடமான நிலையில் மதுரைமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்தில் பட்டாசு ஆலை பலத்த சேதமடைந்தது. கட்டடத்தின் இடிபாடுகள் சிறிது தூரம் வரை சிதறிக் கிடந்தன. விபத்துஏற்பட்ட போது சுமார் 1 கிமீ சுற்றளவுக்கு பலத்த சத்தம் கேட்டதாக இப்பகுதியினர் தெரிவித்தனர்.

விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் மதுரை கலெக்டர் ராஜேந்திரன், எஸ்பி சுந்தரேசன் ஆகியோர் விரைந்து சென்று விசாரணைநடத்தினார்கள்.

ஜெ. நிதியுதவி:

இந்த விபத்தில் 8 பேர் இறந்தது குறித்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, இறந்தவர்களின் குடும்பங்கள்ஒவ்வொன்றுக்கும் தலா ரூ. 50,000 நிதியுதவியை அறிவித்துள்ளார். மேலும், காயமடைந்தோர் இருவருக்கும் தலா ரூ. 15,000நிதியுதவியையும் அவர் அறிவித்துள்ளார்.

இதற்கிடையே, பட்டாசுத் தொழிற்சாலையின் உரிமையாளர் கோசல ராமனை போலீஸார் இன்று கைது செய்து பெருங்குடி காவல்நிலையத்தில் வைத்து விசாரித்தனர். பின்னர் அவர் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+