ஜெயலட்சுமிக்கு பாதுகாப்பு தேவையில்லை: ஐஜி

Subscribe to Oneindia Tamil

மதுரை:

ஜெயலட்சுமிக்கு தொடர்ந்து பாதுகாப்பு அளித்து வருவதால் பொது மக்களின் பணம் தான் விரயமாகிறது. அவரது உயிருக்கு ஆபத்துஇருப்பதாக கூறப்படுவதும் கட்டுக்கதை. எனவே அவருக்கு போலீஸ் பாதுகாப்பு தேவையில்லை என்று மதுரை நீதிமன்றத்தில்தென்மண்டல போலீஸ் ஐஜி மனு தாக்கல் செய்துள்ளார்.

தனக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பை நீட்டிக்ககோரி மதுரை தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஜெயலட்சுமி மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி அய்யாச்சாமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் தரப்பில் தென்மண்டலஐஜி திரிபாதி பதில் மனு தாக்கல் செய்தார்.

அதில், ஜெயலட்சுமி தனது மனுவில் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியுள்ளது கற்பனை கதையாகும். அவருக்கு ஏதேனும் பாதுகாப்புதேவைப்பட்டால் அவரது சொந்த செலவிலேயே தனியார் பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

ஜெயலட்சுமிக்கு தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படுவதால் பொதுமக்களின் பணம் அதிக அளவில் விரயமாகிறது. தற்போதுசிபிஐ தாக்கல் செய்துள்ள அறிக்கையில் அவர் மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டிருப்பதால் பொதுமக்களின் பணத்தை விரயம் செய்யவேண்டிய அவசியமில்லை.

இதுவரை அவர் உண்மையான காரணங்களுக்காக போலீஸ் பாதுகாப்பை பயன்படுத்தாமல், தவறான காரணங்களுக்காக அவர்பயன்படுத்தியுள்ளார். பல முறை போலீஸை அவமானப்படுத்தியுள்ளார்.

இதுவரை ஜெயலட்சுமிக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பால் அரசுப் பணம் பல லட்சம் செலவாகியுள்ளது. இதனால் ஜெயலட்சுமிக்குவழங்கப்பட்டு வரும் போலீஸ் பாதுகாப்பை வாபஸ் பெறவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பதில் மனுவை படித்துப் பார்க்க கால அவகாசம் வேண்டும் என்று ஜெயலட்சுமியின் வழக்கறிஞர்கள் கேட்டனர். இதைத் தொடர்ந்துமனு மீதான விசாரணையை 17ம் தேதிக்கு நீதிபதி அய்யாச்சாமி தள்ளி வைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+