ராவ் உத்தரவு: வெளியாட்களை விடிய விடிய தேடிய போலீஸ்- அமைச்சர்கள் வெளியேறினர்
காஞ்சிபுரம் & கும்மிடிப்பூண்டி:
காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி தொகுதியில் தங்கியிருந்த வெளியாட்களை வெளியேற்ற நேற்றிரவு முழுவதும் போலீசார் அதிரடி சோதனைநடத்தினர்.
திருமண மண்டபங்கள், விடுதிகள், சந்தேகமான வீடுகள், சத்திரங்களில் இந்தச் சோதனை நடந்தது. அதிரடி சிறப்புப் பார்வையாளர் ராவின்உத்தரவுப்படி இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டன.
அங்கு விதியை மீறி வைக்கப்பட்டிருந்த அதிமுக, திமுக பேனர்ககளை அகற்றினார். மேலும் வீடு, வீடாகச் சென்று திமுகவினரும்அதிமுகவினரும் ஓட்டு போட காசு கொடுத்தார்களா என்று கேட்டறிந்தார்.
அப்போது பலரும் அதிமுக சார்பில் கிரிக்கெட் பேட்கள், வேட்டி, சேலைகள், வேட்டிக்குள் பணம் ஆகியவை தரப்பட்டதை ஒப்புக்கொண்டனர். இதைக் குறித்துக் கொண்ட ராவ், தொகுதியில் கள்ள ஓட்டைத் தடுக்க வெளியாட்களை உடனே வெளியேற்ற நடவடிக்கைஎடுக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து போலீசார் இரவு முழுவதும் டார்ச் லைட்டுகளுடன் ஊரைச் சுற்றி வந்து கொண்டிருந்தனர். அங்கே செக் பண்ணியாச்சா..இங்கே செக் பண்ணியாச்சா என்று ஏற்கனவே தன்னிடம் உள்ள லிஸ்டில் உள்ள இடங்களைச் சுட்டிக் காட்டியும் போலீசாரை விரட்டினார்ராவ்.
தங்களை விட ராவ் ரொம்பவே விவரம் என்பதை மீண்டும் உணர்ந்து கொண்ட போலீசார் சீரியஸாகவே தங்கள் வேட்டையில் இறங்கிவெளியாட்களை இரவு முழுவதும் தேடித் தேடி வெளியேற்றினர்.
மேலும் அமைச்சர்கள், வாரியத் தலைவர்கள், திமுக முன்னாள் அமைச்சர்கள் எல்லாம் தொகுதிகளை விட்டுக் கிளம்பியாச்சா என்று கேட்டராவ், கிளம்பாதவர்களை தானே தொலைபேசியில் தொடர்பு கொண்டு இடத்தைக் காலி செய்ய உத்தரவிட்டார்.
இதையடுத்து அமைச்சர்கள் வேறு வழியில்லாமல் லோக்கல் ஆட்களிடம் பொறுப்புக்களை (துட்டு தான்) ஒப்படைத்துவிட்டு ஓடினர்.
காஞ்சிபுரத்தைக் கலக்கிய பின்னர் மாலையில் கும்மிடிப்பூண்டிக்கு சென்றார் ராவ். அங்கு வாக்கு எண்ணும் மையத்தைப் பார்வையிட்டுஆய்வு செய்தார். பின்னர் அங்கிருந்து கிளம்பி தாமரைப்பாக்கம் கூட்டு சாலையை அடைந்தார். அங்கு அமைச்சர் வளர்மதி, நடிகர்ராதாரவி ஆகியோர் பிரசாரம் செய்து கொண்டிருந்தனர்.
சரியாக 5 மணிக்கு இவர்கள் பிரச்சாரத்தை முடிக்கிறார்களா என்பதை கண்காணியுங்கள். இல்லாவிட்டால் வழக்குப் பதிவு செய்யுங்கள்என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு விட்டு அங்கிருந்து கிளம்பினார். இதையடுத்து வாட்சைப் பார்த்தபடியே பேசிய ராதாரவி தனதுபேச்டை சரியாக 5 மணிக்கு கட் செய்து விட்டு மேடைவிட்டு வேகமாக இறங்கினார். அவரைவிட வேகமாய் இறங்கி ஓடினார் வளர்மதி.
இதைத் தொடர்ந்து ஊத்துக்கோட்டை என்ற சிறிய ஊரில் வீடு வீடாக சென்று வெளியூர்க்காரர்கள், கட்சித் தொண்டர்கள் யாராவதுகூட்டமாக தங்கியிருக்கிறார்களா என்பதை சோதனை செய்தார் ராவ். ஊரில் உள்ள ஒரு வீடையும் விட்டு வைக்காமல் அனைத்துவீடுகளிலும் ஏறி இறங்கினார். குடிசைகளையும் விட்டு வைக்கவில்லை அவர்.
இன்று இந்த இரு தொகுதிகளிலும் யாரும் எந்தவித பிரச்சாரத்திலும் ஈடுபடக் கூடாது என ராவ் உத்தரவிட்டுள்ளார். மேலும் வெளியாட்கள்(கட்சிக்காரர்கள்) யாராவது தொகுதிக்குள் இன்று சுற்றிக் கொண்டிருந்தால் உடனே கைது செய்யவும் ராவ் உத்தரவிட்டுள்ளார்.
நாளை காலை 7 மணியில் இருந்து மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடக்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.
இந் நிலையில் ராவ் ஒரு தொகுதியில் இருந்தால் இன்னொரு தொகுதியில் அத்துமீறல்களில் அதிமுகவினரும் திமுகவினரும் ஈடுபடுவதைத்தடுக்க இன்னொரு சிறப்புப் பார்வையாளரையும் மத்திய தேர்தல் கமிஷன் நியமித்துள்ளது.
கர்நாடகத்தைச் சேர்ந்த என்.சி. முனியப்பா என்ற இந்த அதிகாரி அம் மாநில நீர்வளத்துறையின் ஆணையராக உள்ளார். பல்வேறுமாநிலங்களில் தேர்தல் சிறப்புப் பார்வையாளராக இருந்த அனுபவம் கொண்டவர்.
இவரை நேற்று முன் தினம் ரகசியமாக தமிழக தேர்தல் பார்வையாளராக மத்திய தேர்தல் கமிஷன் நியமித்தது. இதை ராவ் தவிர யாரும்அறிந்திராத நிலையில் நேற்று அவர் பெங்களூரில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்திறங்கினார்.
அங்கிருந்து கார் மூலம் திருவள்ளூர் மாவட்ட கலெக்டரைச் சந்தித்து கும்மிடிப்பூண்டி நிலவரம் குறித்து விசாரித்தார். பாதுகாப்புக்குஎத்தனை போலீசாரை வைத்திருக்கிறீர்கள் என முனியப்பா கேட்க, 2,500 பேர் சார் என்று கலெக்டர் வெங்கடேசனிடம் இருந்து பதில்வந்தது.
இந்த எண்ணிக்கை எப்படி போதுமாகும்? கூடுதல் போலீசாருக்கு ஏற்பாடு செய்யுங்கள் என முனியப்பா உத்தரவிட்டார். அதற்கு கலெக்டர்ஏதோ பதில் சொல்ல, தேர்தல் விதிமீறல் நடந்தாலோ, அதை எந்த போலீஸ் அதிகாரியோ, மாநில அதிகாரியோ வேடிக்கை பார்த்தாலோநான் சும்மா இருக்க மாட்டேன்.
கூடுதல் போலீஸைப் போட்டு கள்ள ஓட்டைத் தடுங்கள். வன்முறையாளர்களைக் கட்டுப்படுத்துங்கள் என்று உத்தரவிட்ட முனியப்பா,கும்மிடிப்பூண்டியில் ஓட்டு எண்ணிக்கை நடக்கவுள்ள ராம் பாலிடெக்னிக் வளாகத்தைப் பார்வையிட்டார்.
அமைச்சர்களை வெளியேற்ற ராவ் உத்தரவு: பணம் கொடுத்தார்களா? விசாரணை












Click it and Unblock the Notifications