கும்பக்கரை அருவியில் மூழ்கி 2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
பெரியகுளம்:
பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் மூழ்கியவரை காப்பாற்ற அருவி நீரில் இறங்கிய அவரது உறவினர்கள் 2 பேர்பரிதாபமாக இறந்தனர்.
கும்பக்கரை அருவியில் தற்போது அதிக அளவில் நீர் விழுவதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அங்கு வந்த வண்ணம் உள்ளனர்.
அப்போது சுரேஷ் நீர்ச் சுழலில் சிக்கிக் கொண்டார். இதையடுத்து அவரைக் காப்பாற்றுவதற்காக அவரது உறவினர்களான ஜெயக்குமார்,சீனிவாசன் ஆகிய இருவரும் நீரில் இறங்கியுள்ளனர்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக இருவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். ஆனால் சுரேஷ் எப்படியோ உயிர் தப்பி மேலேறி விட்டார். நீரில்அடித்துச் செல்லப்பட்ட இருவரும் பின்னர் பிணமாக மீட்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications