திருக்குறுங்குடி சிவன் சன்னதி விவகாரம்: அரசு புது விளக்கம்
மதுரை:
திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் பெருமாள் கோயிலில் இருந்த சிவன் சன்னதி தமிழக அரசின் ஒப்புதலுடன் தான் அகற்றப்பட்டது எனஇந்து அறநிலையத் துறை ஆணையர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி பெருமாள் கோயிலில் சிவன் சன்னதி இருந்தது. இதன்மூலம் சைவ-வைணவ ஒற்றுமையின் சின்னமாகஇக்கோவில் விளங்கி வந்தது.
இந்த ஊரைப் பூர்வீகமாக் கொண்ட அந்த நிறுவன குடும்பங்களுக்கு சிவலிங்கத்தை அகற்றினால் தான் நல்லது என கேரள ஜோதிடர்பரிகாரம் சொன்னாராம்.
இந் நிலையில் கடந்த ஆண்டு ஜூனில் சிவலிங்கம் பெயர்த்து எடுக்கப்பட்டது.
இந்த சன்னதி அகற்றல் நடந்தபோது ஜெயலலிதா-போயஸ் கார்டன் இடையே நல்லுறவு இருந்தது. இதனால் கேரள ஜோதிடரின்பரிந்துரைப்படி, ஜெயேந்திரரின் ஆலோசனைப்படி திறுக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவில் வளாகத்தில் இருந்த சிவன் சன்னதியைதமிழக அரசின் இந்து அறநிலையத்துறை அகற்றியது.
இது நடந்தது கடந்த 2004ம் ஆண்டு ஜூன் மாதம்.
அந்த விவகாரத்தில் ஜெயேந்திரர் மீது குற்றம் சாட்டினார் திருக்கோஷ்டியூர் அர்ச்சகரான மாதவன். சைவ மாடாதிபதியான ஜெயேந்திரர்அனாவசியமாக வைணவத் தலங்களில் தலையிடுவதாக அர்ச்சகர் மாதவன் குற்றம் சாட்டினார். (இதனால் அவர் தாக்கப்பட்டது தனிக்கதை).
சிவன் சன்னதி இடிக்கப்பட்டதைக் கண்டு கொதித்துப் போன பக்தர்கள் பலரும் வழக்குத் தொடர்ந்தனர். இதை எதிர்த்து தமிழக அரசுஏற்கனவே ஒரு பதில் மனு தாக்கல் செய்திருந்தது. அதில், சிவன் சிலையை அகற்றியது தொடர்பாக தமிழக அரசின் இந்து அறநிலையத்துறையின் அனுமதி பெறப்படவில்லை என்று கூறப்பட்டிருந்தது.
இந் நிலையில் அப்படியே ஒரு அந்தர் பல்டி அடித்து தற்போது புதிதாக இன்னொரு பதில் மனு ஒன்றை அரசு தாக்கல் செய்துள்ளது.
இந்து அறநிலையத் துறை ஆணையர் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில்,
அந்தக் கோயிலில் சிவன் சன்னதியை வேறு இடத்துக்கு மாற்றியதில் எந்தத் தவறும் இல்லை.
சிவன் சிலையை அகற்ற அறநிலையத் துறையின் அனுமதி பெறப்படவிலலை என்றாலும், அதுகுறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டது.அந்தக் குழு அறிக்கையில், ஒரு கோயிலில் உள்ள முக்கிய சன்னதியைத் தான் மாற்றக் கூடாது. துணை சன்னதிகளில் உள்ள சிலைகளைஅகற்றி மாற்றலாம் என பரிந்துரை அளித்தது.
மேலும் சிலையை அகற்றியதில் தவறில்லை என்று கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, சிலையை அகற்றியது சரியே என்று கடந்த மாதம்அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
எனவே, இந்த மாற்றத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என அறநிலையத்துறை ஆணையரின்மனுவில் கூறப்பட்டுள்ளது.
அரசின் இந்த அரசாணையை எதிர்த்து புதிய வழக்கு தொடர இந்து சமய அமைப்புகள் முடிவு செய்துள்ளன.
இந்த சிவலிங்கம் அகற்றப்பட்ட விவகாரத்தில் ஜெயேந்திரர் தவிர மூன்றெழுத்து நிறுவனம் மீதும் நடவடிக்கை வரலாம் என்று பரவலாகக்கூறப்பட்டது. ஆனால், கேரள ஜோதிடர் மூலமாக போயஸ் கார்டனை அந்த மூன்றெழுத்து நிறுவனம் சரி கட்டிவிட்டதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications