விஜயகாந்துக்கு பாடம் புகட்டுவோம்: அன்புமணி
சென்னை:
அரசியலை சுயநலத்துக்காக பயன்படுத்த விஜயகாந்த் நினைத்தால், நாங்கள் சும்மா விடமாட்டோம் என்று மத்திய அமைச்சர்அன்புமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறுகையில், வெளி மாநிலங்களில் சினிமாக்காரர்கள் தங்களது தொழிலை மட்டுமேகவனிக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் தான் சிலர் முதல்வராக ஆசைப்படுகிறார்கள். இவர்களைப் போன்றவர்களால்தான் தமிழகம் மோசமான நிலையை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது.
படங்கள் ஓடாத நிலை ஏற்பட்டுவிட்டதால், இப்போது அரசியலுக்கு வரப்போவதாக அவர் கூறி வருகிறார். சுயநலத்துக்காகஅவர் அரசியலை பயன்படுத்த நினைத்தால் நாங்கள் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம். அவரது அரசியல்தமிழ்நாட்டில் எடுபடப் போவதில்லை.
சினிமாக்காரர்களின் தவறை தைரியமாக சுட்டிக் காட்டும் கட்சி பாமக. சினிமா சாயம் எங்கள் கட்சி மீது இல்லை. தமிழ்நாட்டில்ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நாங்கள் பாடுபட்டு வருகிறோம்.
சினிமா என்பது சக்தி வாய்ந்த ஊடகம். அதன் மூலம் நாட்டு மக்களுக்கு நல்ல விஷயங்களை சொல்ல வேண்டும். மாறாகநடிகர்கள் தங்களை ஏதோ சாமி மாதிரி சித்தரித்துக் கொண்டு, மக்களை ஏமாற்றி, அரசியலில் நுழைய நினைத்தால் நாங்கள்விடமாட்டோம்.
ரஜினிகாந்த் தவறான வழிகாட்டுதலால் அரசியலுக்கு வர தீர்மானித்தார். ஆனால் இப்போது அந்த தீர்மானத்தை அவர் கைவிட்டுவிட்டார். தற்போது தான் அவர் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறார்.
பாபா படத்தில் சிகரெட் பிடிப்பது போலவும், மது குடிப்பது போலவும் நடித்தபோது அப்படி நடிக்கக் கூடாது என்று ரஜினியைநாங்கள் வலியுறுத்தினோம். அவர் கேட்கவில்லை. அதனால் அந்தப் படம் படுதோல்வி அடைந்தது.
இப்போது சந்திரமுகியில் புகை பிடிப்பது, மது குடிப்பது போன்ற காட்சிகளை அவர் வைக்கவில்லை. இதனால் இந்தப் படம்மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று, வெற்றிகரமாக ஓடுகிறது.
ஆனால், இந்த விஜயகாந்த் இப்போது அரசியலுக்கு வந்து ஆட்சியை பிடிக்கும் கனவோடு கிளம்பியிருக்கிறார். அவருக்குநாங்கள் யார் என்பதை புரிய வைப்போம் என்றார்.












Click it and Unblock the Notifications