குண்டர் சட்டத்தில் ஆதிகேசவன் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மோசடி வழக்குகளில் கைதான ஆதிகேசவன் இன்று குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

மோசடி மன்னன் கோடிக்கணக்கான பணத்தை எங்கே பதுக்கி வைத்துள்ளார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். அவரது கூட்டாளி ஜெயவீரனிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆதிகேசவன் மீது இதுவரை 32 புகார்கள் வந்துள்ளன. ரூ. 7 கோடி வரை அவர் மோசடி செய்துள்ளது இதுவரை வந்த புகார்களின்இறுதியில் தெரியவந்துள்ளது.

இன்னும் தொடர்ந்து பலர் புகார் கொடுத்தவண்ணம் உள்ளனர். மோசடி தொடர்பாக ஆதிகேசவன், அவரது கூட்டாளிகள்ஜெயவீரன், மிகிர், சிவக்குமார் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆதிகேசவனின் மகன் சாரதி எம்சிஏ படித்து வருகிறார். அவர் தற்போது வெளியூரில் தங்கி படித்து வருவதாக அவரதுகுடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ரூ.50 கோடி மோசடியில் ஆதிகேசவனின் மகன் சாரதிக்கும் தொடர்பு இருப்பதுகண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவரை கைது செய்ய போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் தகராறு செய்தால் அவர்களை தாதா கும்பலுடன் சென்று சாரதி மிரட்டுவாராம். அவரிடம்விசாரித்தால் ஆதிகேசவன் வாங்கிக் குவித்த சொத்துக்கள் குறித்து தெரியவரும் என்று போலீஸார் கருதுகின்றனர்.

குண்டர் சட்டம்:

இதற்கிடையே ஆதிகேசவன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை சென்னை போலீஸ் கமிஷனர்நட்ராஜ் இன்று பிறப்பித்தார். சென்னை மத்திய சிறையில் உள்ள ஆதிகேசவனிடம் இதற்கான நகலை போலீஸார் இன்றுவழங்கினார்கள்.

ஆதிகேசவனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டாம் என்று கோரி அவரது மனைவி சாந்தியும், மகள் அனிதாவும்சமீபத்தில் ஆணையர் நடராஜை சந்தித்து கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+