காரைக்காலை தனி மாநிலமாக்க கோரி போராட்டம்
காரைக்கால்:
பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட காரைக்கால் பகுதியை தனி யூனியன் மாநிலமாக அறிவிக்கக் கோரி மே 30ம்தேதி முதல் தொடர் போராட்டம் நடத்த அப்பகுதி மக்கள் முடிவு செய்துள்ளனர்.
பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்டது காரைக்கால். இருப்பினும், காரைக்கால் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு அரசுவேலை வாய்ப்பு உள்ளிட்டவற்றில் சரியான பிரதிநிதித்துவம் தரப்படுவதில்லை, மாற்றாந்தாய் மனப்பான்மைப் போக்குடன்புதுவையில் உள்ளவர்கள் நடந்து கொள்கிறார்கள் என்று காரைக்கால் பகுதியினரிடையே நீண்ட காலமாக அதிருப்தி நிலவிவருகிறது.
இந்த அமைப்பின் முதல் கூட்டம் காரைக்காலில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில், காரைக்காலை புதுவை அரசின் பிடியிலிருந்துவிடுவித்து தனி யூனியன் பிரசேமாக அறிவிக்க வேண்டும். பொருளாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, வளர்ச்சித் திட்டங்களில்புதுவை அரசால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் காரைக்கால் பகுதி, புதுவை மாநிலத்தில் நீடிக்க விரும்பவில்லை.
காரைக்காலை தனி மாநிலமாக அறிவிக்கும் வரை மே 30ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தப்படும். முதல் கட்டமாக 30ம்தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். அதைத் தொடர்ந்து சாலை மறியல், மனிதச் சங்கிலி, கடையடைப்பு உள்ளிட்டபல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications