எந்த அரசியல் கட்சிக்கும் ஒழுக்கம் கிடையாது- கிருஷ்ணமூர்த்தி
டெல்லி:
தலைமை தேர்தல் கமிஷன் பதவியிலிருந்து இன்று ஓய்வு பெற்ற கிருஷ்ணமூர்த்தி அரசியல் கட்சிகளை கடுமையாக விமர்சித்தார்.
சமீபத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியான சப்தரிஷி என்பவர் புதிய தலைமை தேர்தல் கமிஷனராக பொறுப்பேற்க உள்ள டாண்டன்மற்றும் தேர்தல் கமிஷனர் கோபாலசுவாமி ஆகியோர் மீது பரபரப்பு புகார்களை கூறினார்.
இதனால் தேர்தல் கமிஷனில் கடும் குழப்பம் ஏற்பட்டது.
இந் நிலையில் தலைமை தேர்தல் கமிஷனர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி இன்றுடன் ஓய்வு பெற்றார். இதையொட்டி அவர்டெல்லியிலுள்ள தனது அலுவலகத்தில் வைத்து நிருபர்களிடம் பேசுகையில், சில சமயங்களில் அரசியல்வாதிகளின்நடவடிக்கைகள் திருப்திகரமாக இருப்பதில்லை.
தேர்தல் கமிஷனின் நடவடிக்கைகளை விமர்சனம் செய்வதும். அதில் அரசியல்வாதிகள் தலையிடுவது தவறானமுன்னுதாரணமாகும். இந்தியாவில் எந்த அரசியல் கட்சியும் ஒழுக்கமாக இருக்க விரும்புவதில்லை.
தேர்தல் குறித்து கடுமையான சட்ட திட்டங்களை கொண்டுவர எந்த அரசியல் கட்சிகளும் விரும்புவதில்லை என்றார்.












Click it and Unblock the Notifications