துப்பாக்கி முனையில் பெண் கற்பழிப்பு!

Subscribe to Oneindia Tamil

ஈரோடு:

விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பெண்ணை சப் இன்ஸ்பெக்டர் கற்பழித்து விட்டதாக ஈரோடு காவல்துறைக்கண்காணிப்பாளரிடம் புகார் கூறப்பட்டுள்ளது.

ஈரோடு அருகே உள்ள கோவில்பாளையம் பகுதியைச் சேர்ந்த சண்முகவேல் என்பவரின் மனைவி மகாலட்சுமி. இருவரும் காதல்திருமணம் செய்து கொண்டவர்கள். சண்முகவேல் கோவையில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஆர்த்தி என்ற 14 வயதுபெண் உள்ளார்.

சண்முகவேல் குடும்பத்துக்கும், அவர்களது வீட்டுக்கு அருகே வசிக்கும் சக்தி என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் வெள்ளோடு காவல் நிலையத்தில் சக்தி புகார் ஒன்றைக்கொடுத்தார். இதுதொடர்பாகசண்முக வேலை வெள்ளோடு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று சப் இன்ஸ்பெக்டர் தேவராஜ் விசாரணை நடத்தினார்.

இந்தச் சூழ்நிலையில் சண்முகவேலின் மனைவி மகாலட்சுமி, ஈரோடு எஸ்.பி. பாலசுப்ரமணியத்திடம் புகார் கொடுத்துள்ளார்.அதில், கோவில்பாளையத்தைச் சேர்ந்த சக்தி என்பவர் வெள்ளோடு காவல் நிலையத்தில் பொய்யான புகார் ஒன்றைக்கொடுத்துள்ளார்.

அந்தப் புகாரின் பேரில், எனது கணவவைர 11ம் தேதி இரவு போலீஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். மறு நாள் இரவு10 மணிக்கு அவரை திருப்பி அனுப்பினர். அன்று நள்ளிரவில் சப் இன்ஸ்பெக்டரும், இன்னொரு வாலிபரும் எங்களது வீட்டுக்குவந்தனர்.

கதவைத் திறக்குமாறு சப் இன்ஸ்பெக்டர் கூறினார். நள்ளிரவில் வந்து கதவைத் திறக்கச் சொன்னால் எப்படி, எதுவாக இருந்தாலும்காலையில் காவல் நிலையத்திற்கு வருகிறோம் என்று நானும், எனது தந்தையும் கூறினோம்.

இதையடுத்து ஆவேசமடைந்த சப் இன்ஸ்பெக்டர் கோபமாக எனது கையைப் பிடித்து இழுத்து தரதரவென இழுத்துச் சென்றார்.இதை எனது கணவர் தடுத்தபோது அவரை அடித்து கீழே தள்ளி விட்டு மோட்டார் சைக்கிளில் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றார் தேவராஜ்.

அங்கு வேறு யாரும் இல்லை. பின்னர் சரி, வா உன்னை வீட்டில் விட்டு விடுகிறேன் என்று கூறிய தேவராஜ், தன்னுடன் வந்தபையனை மோட்டார் சைக்கிளைஓட்டச் சொல்லி விட்டு என்னை பைக்கில் உட்காருமாறு கூறி அவர் பின்னால் உட்கார்ந்துகொண்டார்.

வண்டியை வீட்டுக்கு ஓட்டாமல், காட்டுப் பகுதிக்கு ஓட்டிச் சென்றனர். எல்லை மாகாளியம்மன் கோவில் அருகே என்னைவண்டியிலிருந்து இறக்கிய சப் இன்ஸ்பெக்டர் துப்பாக்கி முனையில் என்னை மிரட்டி கற்பழித்து விட்டார்.

பிறகு அதிகாலை 3.30 மணிக்கு என்னை எனது வீட்டுக்கு அருகே கொண்டு வந்த விட்ட தேவராஜ், இதுகுறித்து யாரிடமும் கூறக்கூடாது என்று மிரட்டி விட்டு சென்று விட்டார். ஆனால் எனது கணவரிடம் நான் நடந்ததைக் கூறினேன் என்று மகாலட்சுமியின்புகாரில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+