அண்ணா பல்கலை. தரம் உயர்ந்துள்ளது: பாலகுருசாமி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அண்ணா பல்கலைக்கழகத்தின் தரம் வெகுவாக உயர்ந்துள்ளது. இந்தத் தரத்தை தொடர்ந்து நிலை நிறுத்த நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பாலகுருசாமி கூறியுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்து வந்த பாலகுருசாமி, நேற்றுடன் ஓய்வு பெற்றார். இதையொட்டிசெய்தியாளர்களை சந்தித்த பாலகுருசாமி கூறுகையில், 3 ஆண்டுகளாக நான் இப்பொறுப்பில் இருந்தபோது பல்வேறுசாதனைகளை பல்கலைக்கழகம் படைத்துள்ளது. தமிழக அரசின் தொடர்ந்த ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு காரணமாகவே இதுசாத்தியமாயிற்று.

எனக்கு பதவி நீட்டிப்பு கொடுக்கப்படாதது குறித்து வருத்தம் ஏதும் இல்லை. மிகவும் சவால் வாய்ந்த பதவியாக துணைவேந்தர்பதவி இருந்தது. இருப்பினும் பல்வேறு தரப்பினரின் ஆதரவுடனும் அதை வெற்றிகரமாக சமாளித்தேன் என்று தான் கூறவேண்டும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளையும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டு வந்ததை பெரியசாதனையாக கருதுகிறேன். அண்ணா பல்கலைக்கழத்தின் தரம் வெகுவாக உயர்ந்துள்ளது. இதை அப்படியே நிலை நிறுத்தும்வகையில் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அதேபோல, பாடத் திட்டங்களை போதிப்பதிலும் பல புதிய அணுகு முறைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் தேர்ச்சி விகிதம்உயர்ந்துள்ளது. வருகிற ஜூன் மாதம் முதல் எஜுசாட் செயற்கைக் கோள் மூலம் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்குபோதனை தொடங்கும். அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் 30 கல்லூரிகள் இந்த செயற்கைக் கோள் கல்வி ஒளிபரப்புதிட்டத்தின் மூலம் பயன் பெறும்.

முதல் கட்டமாக 5 பாடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்திலிருந்து நேரடியாக மாணவர்களுக்கு நடத்தப்படும் என்றார்பாலகுருசாமி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+