காய்கிறது மேட்டூர் அணை: காவிரி டெல்டா விவசாயிகள் கலக்கம்
மேட்டூர் & திருச்சி:
மேட்டூர் அணையின் நீர் மட்டம் படு மோசமாக உள்ளதால், இந்த ஆண்டு சாகுபடிக்கு போதிய நீர் கிடைக்குமா என்ற கவலையில்விவசாயிகள் மூழ்கியுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். ஜூன் மாதம் முதல் ஜனவரி மாதம்வரையிலான சாகுபடி காலத்திற்கு 324 டிஎம்சி தண்ணீர் தேவைப்படும்.
இந் நிலையில் அணையைத் திறப்பதற்கு இன்னும் 3 வாரங்களே உள்ள நிலையில் அணையில் போதிய நீர் இல்லை. தற்போதுஅணையில் 19 டிஎம்சி அதாவது 52 அடி நீரே இருப்பு உள்ளது. 90 அடி நீர் இருந்தால்தான் அணை திறக்கப்படும். அணைக்குவினாடிக்கு 600 கன அடிநீரே வந்து கொண்டுள்ளது.
பருவ மழை பெய்தால்தான் மேட்டூர் அணையைத் திறப்பது குறித்து எதுவும் கூற முடியும் என்ற நிலை நிலவுவதால் காவிரிப்பாசனப் பகுதி விவசாயிகள் பெரும் கவலையில் மூழ்கியுள்ளனர்.
ஜெவுக்கு ராமதாஸ் கோரிக்கை:
இந் நிலையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், காவிரிப் பாசனப் பகுதியில் பாசனத்திற்காக ஜூன்12ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். இதுதொடர்பான முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்பைபாசனப் பகுதி விவசாயிகள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.
உரிய நீர் இலலாவிட்டால் கர்நாடகத்திடம் கோரிக்கை விடுத்து தமிழகத்திற்குரிய நீரை திறந்து விட கர்நாடக அரசை முதல்வர்ஜெயலலிதா வற்புறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஆணையத்தை கூட்ட பாஜக கோரிக்கை:
இதற்கிடையே இன்று திருச்சி வந்த தமிழக பாரதீய ஜனதாக் கட்சி பொறுப்பாளர் பண்டாரு தத்தாத்ரேயா செய்தியாளர்களிடம்பேசுகையில்,
ஆண்டுதோறும் 205 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டும். ஆனால் உபரி நீரை மட்டுமே ஆண்டுதோறும் விடுவித்துவருகிறது. தமிழகத்திற்குரிய நீரை கர்நாடகம் வழங்குவதில்லை.
தற்போது காவிரிப் பாசனப் பகுதியில் விவசாயப் பணிகளை தொடங்க வேண்டிய நிலையில் விவசாயிகள் உள்ளனர். எனவேகர்நாடகம் உரிய நீரை விடுவிப்பதற்கு வசதியாக, காவிரி நதி நீர் ஆணையத்தை பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக கூட்டவேண்டும் என்றார் தத்தாத்ரேயா.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications