சென்னை: தரையிறங்கிய குட்டி விமானத்தில் தீ விபத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கிய தனியாருக்குச் சொந்தமான சிறிய விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்புஏற்பட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு குட்டி விமானம் பெங்களூரில் இருந்து சென்னை வந்தது.

நேற்றிரவு 7.30 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியது. அதில் பயணிகள் யாரும் இல்லை. பைலட்டும், துணைபைலட்டும் மட்டுமே இருந்தனர்.

விமானம் தரையிறங்கியபோது, விமானத்தின் பின் பக்க டயர்களில் தீப்பிடித்துக் கொண்டது.

அதிக உராய்வு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. டயர்களில் தீப்பிடித்துக் கொண்டதும், உடனடியாக தீயணைப்புவீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 20 நிமிடத்திற்குள் தீ அணைக்கப்பட்டு விட்டது.

தீ விபத்து காரணமாக சுமார் அரை மணி நேரம் விமான நலையத்தில் விமானப் போக்குவரத்து தடைப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+