காவிரி: மக்களுக்கு ஜெ பெரும் துரோகம்- ராமதாஸ் பாய்ச்சல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

காஞ்சிபுரம் மற்றும் கும்மிடிப்பூண்டியில் தேர்தல் சிறப்புப் பார்வையாளராக செயல்பட்ட கே.ஜே.ராவ், சும்மா பரபரப்பைஏற்படுத்தினாரே தவிர ஆளுங்கட்சியின் விதி மீறல்களை அவர் கண்டுகொள்ளவே இல்லை என்று பாமக நிறுவனர் டாக்டர்ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

அடுத்த மாதம் 12ம் தேதி நெல் சாகுபடிக்கு மேட்டூர் அணையைத் திறக்க வேண்டும். ஆனால் மேட்டூரில் சுத்தமாக தண்ணீர்இல்லை. அதுகுறித்து ஜெயலலிதாவுக்கு கொஞ்சம் கூட கவலையும் இல்லை. கர்நாடகத்திடம் இருந்து நீரைப் பெறுவதற்குஅவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதைப் பற்றி அவர் அலட்டிக் கொள்ளவும் இல்லை.

இப்படிப்பட்ட ஜெயலலிதாவுக்கு, மத்தியில் உள்ள தமிழக அமைச்சர்களைப் பார்த்து குறை சொல்ல என்ன அருகதைஇருக்கிறது?

ஆனால், காவிரி நடுவர் மன்றத்தின் ஆயுட்காலத்தை மேலும் 1 ஆண்டுக்கு நீட்டிக்க முயற்சி நடக்கிறது. இதற்கு ஜெயலலிதாஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் வருகின்றன. கால நீட்டிப்புக்கு ஜெயலலிதாவின் அனுமதியுடன் தமிழக அரசின்வழக்கறிஞர் தலையை ஆட்டிவிட்டதாக சொல்கிறார்கள்.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை தமிழகம் விரைவில் எதிர்பார்த்துக் கொண்டுள்ள நிலையில், முதல்வர் ஜெயலலிதாவின்இந்தச் செயல் மக்களுக்கு அவர் செய்யும் பெரும் நம்பிக்கைத் துரோகமாகும்.

காஞ்சி, கும்மிடிப்பூண்டியில் தேர்தல் சிறப்புப் பார்வையாளராக செயல்பட்ட கே.ஜே.ராவ் வெறுமனே பரபரப்பைஏற்படுத்தினார். அவரது செயல்பாடுகளைப் பார்த்தபோது மிகவும் நியாயமான முறையில் தேர்தல் நடைபெறும் என்றநம்பிக்கை ஏற்பட்டது.

ஆனால் பரபரப்பை மட்டுமே ஏற்படுத்திய ராவ், அதிமுகவினரின் தேர்தல் விதிமீறல்கள், அதிகார துஷ்பிரயோகம்,பணபலத்தைப் பயன்படுத்தியது ஆகியவற்றைக் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டார்.

அனைவரையும் திசை திருப்பும் வகையில் அவர் நடந்து கொண்டாரே தவிர ஆளுங்கட்சியினரின் முறைகேடுகளை அவர்கண்டுகொள்ளவே இல்லை என்றார் ராமதாஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+