வருடந்தோறும் ரூ.1300 கோடிக்கு தலைமுடி ஏற்றுமதி செய்யும் இந்தியா

Subscribe to Oneindia Tamil

ஐதராபாத்:

இந்திய தலைமுடிக்கு வெளிநாடுகளில் கடும் கிராக்கி நிலவுகிறது. இதனால் வருடந்தோறும் ரூ.1300 கோடிக்கு இந்தியாவிலிருந்துதலைமுடி ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ஆண்களுக்கோ, பெண்களுக்கோ தலைமுடி நீளமாக, சுருள் சுருளாக இருந்தால் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். தற்போது இந்ததலைமுடியை ஏற்றுமதி செய்வதில் இந்தியா உலகில் முன்னணி இடத்தை பிடித்துள்ளது.

இந்தியாவில் தான் அதிக அளவில் கோவிலுக்கு மொட்டை போட்டு நேர்த்திக் கடன் செலுத்துபவர்கள் அதிக அளவில் உள்ளனர். திருப்பதி,பழனி ஆகிய கோவில்களில் தான் அதிக அளவில் பக்தர்கள் மொட்டை போட்டு தங்கள் முடியை காணிக்கை செலுத்துகின்றனர்.

இதனால் இந்தியாவிலிருந்து கடந்த 1960ம் ஆண்டிலிருந்து தலைமுடி ஏற்றுமதி தொடங்கியது. தற்போது இந்த முடி ஏற்றுமதி தொழில்கொடி கட்டிப்பறக்கிறது.

திருப்பதி கோவில் தேவஸ்தானம் நீள முடி 1 கிலோ 8,500 ரூபாய்க்கும், குட்டை முடியை 1 கிலோ 50 ரூபாய்க்கும் விற்கிறது. இவற்றைவாங்கி பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் 40க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

இந்த நிறுவனங்கள் வருடந்தோறும் ரூ.1300 கோடிக்கு தலைமுடியை ஏற்றுமதி செய்கின்றன.

இந்திய தலைமுடிக்கு அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கடும் கிராக்கி நிலவுகிறது. இந்தியாவைப் போன்று மற்ற நாடுகளில்பல ரகங்களில் தலை முடி கிடைக்காததே இதற்கு காரணம்.

ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகளில் இந்த தலைமுடிகள் மூலம் அமினோ அமிலம் போன்ற ரசாயனங்களை தயாரிக்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+