பாவாணன் விடுதலையை எதிர்த்து அரசு அப்பீல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

புதுக்கோட்டை பாவாணனை பொடா சட்டத்தின் கீழ் கைது செய்தது செல்லாது என்று பொடா மறு ஆய்வுக் குழு பிறப்பித்த உத்தரவைஎதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது.

பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பழ. நெடுமாறன், வைகோ, சுபவீரபாண்டியன் உள்ளிட்ட சிலரை அந்த சட்டத்தின் கீழ் கைதுசெய்தது செல்லாது, அதற்கான முகாந்திரமே இல்லை என்று கூறி அவர்களை விடுதலை செய்யுமாறு பொடா மறு ஆய்வுக் குழுஉத்தரவிட்டது.

பொடா மறு ஆய்வுக் குழுவின் இந்த உத்தரவுகளை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளது. இந் நிலையில் கடந்தவாரம் புதுக்கோட்டை பாவாணனை பொடா சட்டத்தின் கீழ் கைது செய்தது செல்லாது என்று பொடா மறு ஆய்வுக் குழு தீர்ப்பளித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.அதில், பொடா மறு ஆய்வுக் குழுவின் உத்தரவை ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே நடந்த கூட்டத்தில், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக கூறி பாவாணன் மீது பொடாசட்டத்தின் கீழ் தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. கைதுசெய்யப்பட்ட அவர், கடலூர் சிறையில் ஒன்றரை வருடம் அடைக்கப்பட்டு பின்னர்ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+