மயக்க மருந்து கொடுத்து ரயில் பயணிகளிடம் கொள்ளை
சென்னை:
மும்பையிலிருந்து சென்னை வந்த ரயிலில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரிடம் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து,நகைகள், பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
சென்னை வரும் ரயில்களில் மயக்க பிஸ்கட் கொடுத்து கொள்ளை அடிக்கும் கும்பலின் கைவரிசை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இந்தக் கொள்ளைக் கும்பல் ஆந்திராவில் உள்ள ஏதாவது ஒரு ரயில் நிலையத்தில் வைத்துத் தான் தனது கைவரிசையைக் காட்டுகிறது.
வேலூரைச் சேர்ந்த சந்திரசேகரன், வரலட்சுமி, ஜெயலட்சமி, தேவி, கண்ணம்மா ஆகிய ஐந்து பேரும், மும்பையிலிருந்து சென்னை வந்துகொண்டிருந்தனர். அப்போது ஆந்திர மாநிலம் குண்டக்கல் என்ற இடத்தில் ரயில் நின்ற போது அவர்களுக்கு ஒருவர் குளிர்பானம்கொடுத்துள்ளார். அதன் பின்னர் ஐந்து பேரும் மயக்கமாகி விட்டனர்.
இதன் பிறகு அவர்களிடமிருந்த நகை, பணம் ஆகியவற்றை ஒரு கும்பல் கொள்ளையடித்து சென்றது.
சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இன்று காலை ரயில் வந்தடைந்த போது ஐந்து பேரும் மயங்கிய நிலையில் கிடந்தனர். அவர்களைரயில்வே போலீஸார் மீட்டு அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களிடம் விசாரணை நடத்திய பிறகு தான் எவ்வளவு நகை, பணம் கொள்ளைபோனது என்பது தெரிய வரும்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications