சுனாமி: கிளின்டன் இந்தியா வந்தார்
டெல்லி:
அமெரிக்க முன்னாள் அதிபர் கிளின்டன் 3 நாள் பயணமாக இந்தியா வந்தார். அவர் நாகப்பட்டினத்தில் சுனாமியால்பாதிக்கப்பட்ட பகுதிகளை நாளை பார்வையிடுகிறார்.
எச்.ஐ.வி., கிருமி மற்றும் எய்ட்ஸ் ஒழிப்பு தொடர்பான கருத்தரங்கில் கலந்து கொள்ளவும், தமிழகத்தில் சுனாமியால் பாதித்தபகுதிகளை பார்வையிடவும் அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டன் நேற்று இந்தியா வந்தார்.
டில்லியில் இருந்து நாளை காலை அவர் சென்னை வருகிறார். அங்கிருந்து, சுனாமியால் அதிகம் பாதித்த நாகப்பட்டினம்மாவட்டத்துக்கு சென்று, சுனாமியால் பாதித்த மக்களை சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.
கிளின்டன் நடத்தும் அறக்கட்டளையின் சார்பில், இப்பகுதியில் சில கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டு உள்ளன. அங்கு நடக்கும்மறுவாழ்வு நடவடிக்கைகளை அவர் பார்வையிடுகிறார். அன்று மாலையே சென்னை திரும்புகிறார்.
சுனாமியால் பாதித்த இந்தோனேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கும் அவர் பயணம் மேற்கொண்டு பார்வையிட உள்ளார்.இலங்கைக்கு நாளை மறுநாள் கிளின்டன் செல்கிறார்.












Click it and Unblock the Notifications