ஆட்டோ டிரைவர்களுக்கு சலுகைகள்: ஜெ. அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஆட்டோ டிரைவர்களுக்கு புதிய சலுகைகளை அறிவித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், ஆட்டோ வாகனப் போக்குவரத்து ஆயிரக்கணக்கானகுடும்பங்களுக்கு வாழ்வளிப்பதுடன் நடுத்தர மக்கள் நாடிச் செல்கின்ற போக்குவரத்து வசதியாகவும் திகழ்கிறது.

தங்களது வாழ்க்கை மேம்பட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஆட்டோ வாகனத் தொழிலாளர்கள் என்னிடம்கோரிக்கை விடுத்தனர். இதை கருத்திற் கொண்டு கீழ்க்காணும் அறிவிப்புகளை வெளியிடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

7 ஆண்டுகளுக்கு மேலான ஆட்டோ வாகனங்களுக்கு 500 ரூபாயாக இருந்த பசுமை வரி 200 ரூபாயாக குறைக்கப்படும்.சென்னை மாநகரில் கூடுதலாக 5000 புதிய ஆட்டோ அனுமதிகள் வழங்கப்படும். இதனால் 5000 குடும்பங்கள் வாழ்வாதாரம்பெற ஏதுவாக அமையும்.

சென்னை மாநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும், வசிப்பிடங்கள் மற்றும் வணிக மையங்களுக்கும் அருகில்ஆட்டோ நிறுத்தங்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்களில் கூடுதலாக 5 பேர் வரை செல்ல அனுமதி வழங்கப்படும்.கடனுதவி பெற்று ஆட்டோ வாங்குவதற்கு புதிதாக மானியத்துடன் கூடிய கடனுதவித் திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும்.

இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், வங்கிகள் மூலம் கடன் வழங்கப்படும் என்றுகுறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+