புதுவையில் நடந்த பிரெஞ்சு தேர்தல்
பாண்டிச்சேரி:
பிரான்ஸ் நாட்டில் நடந்த தேர்தலில், புதுவையைச் சேர்ந்த, பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள், புதுவையிலேயே வாக்களித்தனர்.
ஐரோப்பிய யூனியன் நாடுகளில் பொதுவான அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவது தொடர்பான கருத்துக் கணிப்புத்தேர்தல் பிரான்ஸ் நாட்டில் நடந்தது. இதில், பொது அரசியல் சட்டத்திற்கு எதிராக பிரான்ஸ் மக்கள் வாக்களித்துள்ளனர்.
புதுவை பிரெஞ்சு துணைத் தூதரகத்தில் வாக்குப் பதிவு நடந்தது. இதில் 1539 பேர் கலந்து கொண்டு வாக்களித்தனர். காலை 8மணி முதல் இரவு 8 மணி வரை வாக்குப் பதிவு நடந்தது.
இதில் பதிவான வாக்குகளில் 1205 பேர் பொதுச் சட்டத்துக்கு ஆதரவாகவும், 323 பேர் எதிராகவும் வாக்களித்திருந்தனர். 11ஓட்டுக்கள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டது.
புதுவை, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய புதுவை யூனியன் பிரதேசத்திற்குட்பட்ட பகுதிகள் ஆங்கிலேயருக்கு முன்பாகபிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications