நெல்லை "ஜாதி கொலை: 3 பேர் சரண்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்த ஜாதிக் கொலை வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த 3 பேர் மதுரை நீதிமன்றத்தில்சரணடைந்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் பத்தமடையை அடுத்த கரிசூழ்ந்தமங்கலத்தை சேர்ந்த கண்ணன் (வயது 32) என்பவர் கடந்த வாரம்அதே பகுதியை சேர்ந்த ஒரு கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார்.

இந்தக் கொலையால் அப்பகுதியில் ஜாதிக்கலவரம் வெடித்தது. கொலையைக் கண்டித்து கண்ணனின் ஆதரவாளர்கள் எதிர்தரப்பினரது வீடுகளுக்கு தீ வைத்தனர். இதில் 15 வீடுகள், 5 வைக்கோல் படப்புகள் எரிந்து நாசமாயின.

கொலை தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந் நிலையில் இக் கொலை வழக்கில்தேடப்பட்டு வந்த அம்பாசமுத்திரத்தை சேர்ந்த மணிகண்டன்(வயது 25), குமார்(வயது 27) மற்றும் ராமர்(வயது 24) ஆகிய 3 பேர்மதுரை 2வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

அவர்களை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி சீதாராமன் உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+