சங்கரராமன் கொலை வழக்கு ஆவணங்கள் திருட்டு? காஞ்சி நீதிமன்றத்தில் துணிகரம்
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை நடந்த காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஓட்டைப் பிரித்து, பெட்டிகளை உடைத்துஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இதில் சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்களும்திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை, காஞ்சிபுரம் தாலுகா அலுவலக வளாகத்திலுள்ள முதல் வகுப்பு குற்றவியல்நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கில் அப்ரூவரான ரவி சுப்பிரமணியத்திடமும் இந்த நீதிமன்றத்தில் தான் குறுக்கு விசாரணைநடந்தது.
நீதிபதி உத்தமராஜின் அறைக்கு அருகே ஆவணங்களை பாதுகாக்கும் அறை உள்ளது. இந்த அறையில் தான் இந்த நீதிமன்றத்தில்நடந்து வரும் வழக்குகள் தொடர்பாக பறிமுதல் செய்யப்படும் பொருட்கள் மற்றும் ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந் நிலையில் ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறையின் மேற்கூரை ஓடுகளை பிரித்து சிலர் உள்ளே புகுந்துள்ளனர். அந்தஅறையில் இருந்த ஆவணங்களை அவர்கள் கலைத்து போட்டுள்ளனர். சில ஆவணங்களும் திருடு போனதாகத் தெரிகிறது.
நேற்று நீதிமன்றத்திற்கு வந்த ஊழியர்கள், ஆவண அறையின் ஓடுகள் பிரிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.உடனடியாக போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் அமல்ராஜ் தலைமையில் போலீஸார்நீதிமன்றத்திற்கு விரைந்து வந்து ஆவண அறையை பார்வையிட்டனர்.
பின் நீதிமன்ற ஊழியர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. தடயவியல் விரைந்துவந்து தடயங்களை பதிவு செய்தனர்.
நீதிமன்ற ஊழியர்கள் அந்த அறையில் வைக்கப்பட்டிருந்த ஆவணங்களை சரிபார்த்து வருகின்றனர். இதன் பிறகே திருடப்பட்டஆவணங்கள் என்பது குறித்து தெரிய வரும்.
சுமார் 6 மாதங்களுக்கு பிறகு ஜெயேந்திரர் நேற்று தான் காஞ்சி சங்கர மடத்திற்கு திரும்பினார். இந் நிலையில் நடந்துள்ள இச்சம்பவம், காஞ்சிபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications