மரக்காணத்தில் மீனவர்கள் பெரும் மோதல்: போலீஸ் தடியடி
மரக்காணம்:
சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவதில் அதிமுக பிரமுகர் ஒருவர் பாகுபாட்டுடன் நடந்துகொண்டதையடுத்து விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே பெரும் மோதல் ஏற்பட்டது.
மரக்காணம் அருகே உள்ள சிப்பிக்குப்பம், செட்டி நகர் பகுதியில் மீனவர்களுக்கு சுனாமி நிவாரண நிதியை வழங்குவதில்பாரபட்சம் காட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதிமுகவைச் சேர்ந்த பிரமுகர் செல்வம் என்பவர் தனக்கு வேண்டியமீனவர்களுக்கு மட்டும் நிவாரண நிதியை வாங்கிக் கொடுத்ததாக எதிர்தரப்பு மீனவர்கள் புகார் கூறி வருகின்றனர்.
இந் நலையில் இன்று காலை இரு தரப்பு மீனவர்களுக்கும் இடையே இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. இது பின்னர்வன்முறையாக வெடித்தது. அரிவாள்கள், கற்கள், கட்டைகளால் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.
உடனடியாக போலீஸார் வரவழைக்கப்பட்டு தடியடி நடத்தி கலவரம் கட்டுப்படுத்தப்பட்டது.
இந்த மோதலில் 4 பேர் படுகாயமடைந்தனர். கலவரம் மற்றும் வன்முறை தொடர்பாக 20 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அப் பகுதியில் தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், அதிக அளவில் ஆயுதப் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும்போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications