4வது ஆண்டாக திறக்கப்படாத மேட்டூர் அணை

Subscribe to Oneindia Tamil

சேலம்:

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் வரத்து மேலும் குறைந்து நிலைமையை மோசமாக்கியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ம் தேதி சம்பா நெல் சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்தநான்கு ஆண்டுகளாக குறித்த நேரத்தில் அணை திறக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் பெரும் துயரத்தை சந்தித்துவருகின்றனர்.

கர்நாடகம் போதிய நீரைத் திறந்து விட மறுப்பதால் அணைத் திறப்பு சாத்தியமற்றுப் போய் வருகிறது.

இந் நிலையில் தொடர்ந்து நான்காவது ஆண்டாக நேற்றும் அணை திறக்கப்படவில்லை. மேலும், அணைக்கு வரும் நீரின் அளவுமேலும் குறைந்து நிலைமையை மோசமாக்கியுள்ளது.

அணைக்கு தற்போது வினாடிக்கு 571 கன அடி நீர்தான் வந்து கொண்டுள்ளது. அணையின் நீர் இருப்பு 53 அடியாக உள்ளது.குறைந்தபட்சம் 90 அடியாக இருந்தால் மட்டுமே அணையைத் திறக்க முடியும் என்று பொதுப் பணித்துறை அதிகாரிகள்கூறியுள்ளனர்.

சேலம் மாவட்டம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளுக்கு குடிநீர்த் தேவைக்காக அணையிலிருந்து வினாடிக்கு 872 கன அடி நீர்வெளியேற்றப்பட்டுக் கொண்டுள்ளது.

அணைக்கு அதிக அளவில் தண்ணீர் வரத்து இருந்தால்தான் அணையைத் திறக்க முடியும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+