ஆதியின் ரூ. 20 லட்சம் மதிப்புள்ள 2 மோதிரங்கள் பறிமுதல்
சென்னை:
மோசடி மன்னன் ஆதிகேசவன் அணிந்திருந்த ரூ. 20 லட்சம் மதிப்புள்ள இரண்டு விலை மதிப்புமிக்க மோதிரங்களை போலீஸார்கைப்பற்றியுள்ளனர்.
ஆதி கேசவனின் வீட்டை சோதனை செய்த போலீஸார் அங்கிருந்து பல்வேறு பொருட்களைக் கைப்பற்றியுள்ளனர். ஆதி கேசவன்அணிந்திருந்த பல லட்சம் மதிப்புள்ள பிரமாண்ட தங்கச் சங்கிலி உள்ளிட்ட நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந் நிலையில் ஆதிகேசவன் அணிந்திருந்த இரண்டு விலை மதிப்புமிக்க மோதிரங்கள் எங்கே போயின என்பது தெரியாமல்இருந்து வந்தது. தற்போது அந்த இரண்டு மோதிரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள அடகுக் கடையிலிருந்து அந்த மோதிரங்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
இதில் ஒரு மோதிரத்தில் 94 விலை மதிப்புமிக்க நவரத்தின கற்களும், இன்னொரு மோதிரத்தில் 112 கற்களும்பதிக்கப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு ரூ. 20 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications