காவிரி நீர் கோரி விவசாயிகள் போராட்டம்; 300 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடகத்தை மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் இந்த போராட்டம் நடத்தப்பட்டது. திருச்சி வெஸ்ட்ரி ரவுண்டானாபகுதியில் விவசாயிகள் தங்களது குடும்பத்துடன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவிரி நீரை பெற்றுத் தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், காவிரியில் கர்நாடகம் நீர் திறந்து விடவேண்டும், கோலப்பன் கமிட்டி பரிந்துரைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்,

விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வுரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திபோராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷமிட்டனர்.

பின்னர் அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக செல்ல முயன்றனர். ஆனால் போலீஸார் அதற்குஅனுமதிக்கவில்லை. தடையை மீறி விவசாயிகள் செல்ல முயன்றபோது, போலீஸார் அவர்களைக் கைது செய்தனர். 100 பேர்அங்கு கைது செய்யப்பட்டனர்.

திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரம், மண்ணச்ச நல்லூர், தாத்தயங்கார்பேட்டை, துறையூர் உள்ளிட்ட பகுதிகளிலும் விவசாயிகள்போராட்டம் நடத்திக் கைதாகினர். மாவட்டம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டம் நடத்தியதற்காக கைதுசெய்யப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+