சன் டிவி வசமானது தினகரன் நாளிதழ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக முன்னணி நாளிதழ்களில் ஒன்றான தினகரன் நாளிதழை சன் டிவி வாங்கியுள்ளது.

ரூ. 350 கோடிக்கு தினகரனை சன் டிவி வாங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், ரூ. 100 கோடிக்கு மட்டுமேவாங்கப்பட்டது என இன்னொரு தகவல் தெரிவிக்கிறது.

தினகரனுக்கு தமிழகம் முழுவதும் 9 பதிப்புகள் உள்ளன. தமிழகத்தில் நாளிதழ்கள் விற்பனையில் 4வது இடத்தைவகித்து வருகிறது தினகரன்.

தினகரன் குழுமத்திற்கு சொந்தமான 3 மாலை முரசு நாளிதழ் பதிப்புகள், தினகரன் சார்பில் வெளியாகி வந்த 9 பதிப்பு கொண்டதமிழ் முரசு மாலை நாளிதழ் ஆகியவற்றையும், தினகரன் நிறுவனத்திற்கு சொந்தமான கட்டடங்கள், அச்சு இயந்திரங்கள்உள்ளிட்ட அனைத்தையும் ஒட்டுமொத்தமாக சன் டிவி குழுமம் விலைக்கு வாங்கி விட்டது.

பத்திரிகையின் பெயரை மாற்றி விரைவில் புதிய பெயருடன் வெளியிட சன் டிவி நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத்தெரிகிறது.

சன் டிவி அதிபரான கலாநிதி மாறன் ஆங்கிலத்திலும் தமிழ் அல்லது தெலுங்கில் ஒரு பத்திரிக்கை தொடங்கும்முடிவில் இருந்தார்.

இந் நிலையில் கே.பி.கந்தசாமி அவர்களால் நிறுவப்பட்ட தினகரனை வாங்கியுள்ளார். மறைந்த கந்தசாமி திமுகவின்முக்கியத் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. வைகோ மதிமுகவைதொடங்கியபோது அவருக்கு தோள் கொடுத்தவர்.

தினத்தந்தி, மாலை முரசு அதிபர்களின் உறவினர் தான் கே.பி.கந்தசாமி என்பது குறிப்பிடத்தக்கது. கேபிகந்தசாமியின் மகனும் இப்போதைய தினகரன் அதிபருமான குமரன், தமிழகத்தின் முன்னணி நாளிதழானதினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தனின் மருமகனாவார்.

குமரன் தான் இதை சன் டிவியிடம் விற்றுள்ளார். இதனை வாங்கியதோடு விரைவில் சன் டிவி குழுமத்தில் இருந்துஆங்கில நாளிதழும் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினகரனின் புதிய ஆசிரியராக பத்திரிக்கையாளர் மாலன் விரைவில் பொறுப்பேற்கவுள்ளார். மாலன் தற்போது சன் டிவி செய்திஆசிரியராக உள்ளார். அந்தப் பொறுப்பிலிருந்து அவர் விரைவில் விலகி தினகரன் ஆசிரியராகப் பொறுப்பேற்பார் என்றுதெரிகிறது.

ஏற்கனவே தினமணி ஆசிரியராக மாலன் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேபோல பிரபல கார்ட்டூனிஸ்ட்டான ஆனந்த விகடன் மதன் தற்போது சன் டிவி குழுமத்திற்குள் நுழைந்துள்ளார். அவடரிம்முக்கியப் பொறுப்பு ஒன்றை ஒப்படைக்கும் திட்டம் சன் டிவியிடம் உள்ளதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+