பஸ் கட்டணத்தை உயர்த்த கூடாது: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் தமிழ்நாட்டில் பஸ் கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியமில்லை என்றுகருணாநிதி கூறியுள்ளார்.

பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நேற்று நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்டது. பெட்ரோலுக்கு ரூ. 2.50ம், டீசலுக்குரூ. 2ம் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்தார். தமிழகத்தைச் சேர்ந்த திமுகதலைமையிலான கூட்டணி இடம் பெற்றுள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு,

சற்றும் ஈவு இரக்கமோ, எந்தவித மன உறுத்தலோ இல்லாமல் திரும்பத் திரும்ப மக்கள் மீது சுமைகைளைஏற்றுவதிலேயே குறியாக இருப்பது போல் தோன்றுகிறது என்றும், டீசல் விலை உயர்த்தப்பட்டாலும் தமிழ்நாட்டில்பஸ் கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது என்றும் ஜெயலலிதா ஒரு அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

இந் நிலையில் பெங்களூரிலுள்ள திமுக தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெயலலிதாஅடுத்த வருடம் வரவிருக்கின்ற தேர்தலை மனதில் வைத்து பஸ் கட்டணம் உயர்த்தப்படாது என்று கூறியுள்ளார்.

2001ம் ஆண்டு ஜெயலலிதா 2வது முறையாக பதவிக்கு வந்த உடன் பஸ் கட்டணத்தை உயர்த்தினார்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டதால் தமிழக அரசுக்கு ஒரு நாளுக்கு ரூ. 3.10 கோடி வருமானம்கிடைக்கும். ஆனால் செலவோ ஒரு நாளுக்கு ரூ. 81.60 லட்சம் தான் ஆகும். இதன் மூலம் தமிழக அரசுக்கு ஒருமாதத்திற்கு ரூ. 68 கோடி கூடுதல் லாபம் கிடைக்கும்.

தமிழக மக்கள் மீது உண்மையிலேயே அவருக்கு அக்கறை இருக்குமானால் பெட்ரோலியப் பொருட்கள் மீதுவிதிக்கப்படும் 27 சதவீத வரியை குறைக்கலாமே என்று கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+