வாக்காளர் பட்டியல்: அரசுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வாக்காளர் பட்டியல் சரி பார்ப்புப் பணிகளில் தமிழக அரசின் தலையீடு எந்த ரூபத்திலும் இருக்கக் கூடாது. அதைதேர்தல் ஆணையம் பொறுத்துக் கொள்ளாது என்று தேர்தல் ஆணையம் தமிழக அரசின் உள்துறைச்செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா வெளியிட்டுள்ள அறிக்கையில், சுனாமியால்பாதிக்கப்பட்ட நாகை, காஞ்சிபுரம், கடலூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் வாக்காளர் பட்டியல் சரி பார்ப்புப்பணி தற்போது நடந்து வருகிறது.

இந்தப் பகுதிகளில் பெயர் நீக்கல், சேர்த்தல் தொடர்பான விண்ணப்பங்களை வழங்க கடைசி நாள் ஜூன் 15ம்தேதியாகும்.

தற்போது கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை சரி பார்க்கும் பணியில் தேர்தல் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.இந்தப் பகுதிகளில் மொத்தம் 28 தொகுதிகள் உள்ளன. இங்கு பெயர் சேர்க்க கோரி மொத்த வாக்காளர்எண்ணிக்கையில் 4.8 சதவீதம் பேர் விண்ணப்பம் கொடுத்துள்ளனர்.

மேலும், 11 தொகுதிகளில் 5 சதவீதத்திற்கும் அதிகமான பேர் விண்ணப்பம் கொடுத்துள்ளனர்.

நாகையில் தான் அதிகபட்சமாக 9.39 சதவீதம் பேர் தங்களது பெயர்களை சேர்க்கக் கோரி மனு கொடுத்துள்ளனர்.இதற்கு அடுத்து ஸ்ரீபெரும்புதூர் (8.83), குறிஞ்சிப்பாடி (8.44), கடலூர் (6.75), காட்டுமன்னார் கோவில் (5.77),

மயிலாடுதுறை (5.75), விருத்தாச்சலம் (5.62), மதுராந்தகம் (5.6), அச்சரப்பாக்கம் (5.55), சிதம்பரம் (5.36),பண்ருட்டி (5.27) ஆகிய தொகுதிகளிலும் வழக்கத்திற்கு விரோதமாக மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

சுனாமி பாதிக்காத பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அதே அணுகுமுறைகள் தான் சுனாமி பாதித்ததொகுதிகளிலும் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணியில் அரசின் தலையீடு துளியும் இருக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையம்கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மாநில உள்துறைச் செயலாளருக்கு தேர்தல் ஆணையம் எழுதியுள்ள கடிதத்தில், தேர்தல் பணியில்ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் தங்களது கடமையிலிருந்து தவறக் கூடாது என அறிவுறுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

எந்த அரசியல் கட்சியின் நிர்ப்பந்தத்திற்கும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் அடிபணியக் கூடாதுஎன்றும், எந்தவித கட்டாயத்திற்கும் பணிந்து விடக் கூடாது என்றும் அறிவுறுத்துமாறு அரசை தேர்தல் ஆணையம்கேட்டுக் கொண்டுள்ளது.

இப்பகுதிகளில் வாக்காளர் பட்டியல் சரி பார்ப்புப் பணியை தேர்தல் ஆணையம் தீவிரமாக கண்காணித்துவருகிறது. தவறு செய்யும் ஊழியர்கள், அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தவறுகள் பொறுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்று கூறியுள்ளார் நரேஷ் குப்தா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+