அரசியலில் செருப்பு மாலைகள் சகஜம்: இளங்கோவன்
அந்தியூர்:
அரசியலுக்கு வந்து விட்டால் பாராட்டு மாலைகளும் வந்து விழும், செருப்பு மாலைகளும் விழத்தான் செய்யும்.இது சகஜமானது தான் என்று மத்திய வர்த்தக இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் உடனடியாக தட்டியையும், செருப்பு மாலையையும் அகற்றினர்.இந்த பரபரப்பான சூழ்நிலையில் அந்தியூர் வந்த இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
அரசியலுக்கு வந்து விட்டால் எல்லாவிதமான மாலைகளும் விழத்தான் செய்யும். புகழ்ந்தும் மாலை போடுவார்கள்,இப்படியும் (செருப்பு மாலை) மாலை போடுவார்கள்.
இதையெல்லாம் ஏற்றுக் கொள்ள மனப்பக்குவம் வேண்டும். இதற்காக நான் வருத்தப்படவும் இல்லை, ஒருபொருட்டாகவும் எடுத்துக் கொள்ளவில்லை.
நான் ஆங்கிலத்திற்கும் முக்கியத்துவம் தர வேண்டும் என்று கூறியுள்ளது பாமகவுக்கு எதிராக அல்ல. இதனால்கூட்டணியில் குழப்பம் வராது. கூட்டணி எப்போதும் போல தொடரும் என்றார் இளங்கோவன்.












Click it and Unblock the Notifications