ஜெ. வழக்குகள்: பெங்களூர் நீதிமன்றம் முடிவு செய்யும்- உயர்நீதிமன்றம்
சென்னை:
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கையும், லண்டன் ஹோட்டல் வழக்கையும் ஒன்றாக விசாரிப்பதாஅல்லது தனித்தனியாக விசாரிப்பதா என்பது குறித்து பெங்களூர் தனி நீதிமன்றம் தான் முடிவு செய்யும் என்றுசென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தற்போது பெங்களூர் தனி நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை நடக்கிறது. நீதிபதி பச்சாப்பூரேஇந்த வழக்கை விசாரிக்கிறார்.
சொத்துக் குவிப்பு வழக்கு, லண்டன் ஓட்டல் வழக்கு ஆகிய இரண்டு வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்கவேண்டும் என்று பெங்களூர் தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுமீதான விசாரணை முடிந்து உத்தரவை வரும் 22ம் தேதிக்கு நீதிபதி பச்சாப்பூரே தள்ளிவைத்தார்.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் சில விளக்கங்கள் கேட்டு உயர்நீதிமன்றத்தில்இளவரசி ஒரு மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று நீதிபதி பி.டி.தினகரன் முன் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஜோதி ஆஜராகி, லண்டன் ஓட்டல் வழக்கை புதிய வழக்காக விசாரிக்க வேண்டியதேவையில்லை. புதிய வழக்காக எடுத்து அந்த வழக்கை தனியாக விசாரிப்பதற்கு தனி நீதிமன்றத்திற்கு சென்னைஉயர்நீதிமன்றம் வாய்ப்பளித்துள்ளது.
இது குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்துக்கு முரணானது. தனி நீதிமன்றத்திற்கு இரண்டுவாய்ப்புகளை சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ளது.
அதில் இரண்டாவதாக கூறியுள்ள வாய்ப்பு (தனியாக விசாரிப்பது) தேவையில்லை. எனவே அதை நீக்கவேண்டும், என்று கூறினார்.
இதன் பிறகு நீதிபதி பி.டி.தினகரன் தனது உத்தரவில் கூறுகையில், குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 482ன் கீழ்உள்ள அதிகாரத்தை செயல்படுத்தும் போது, ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவுகளை இத்தருணத்தில் விவாதிப்பது சரியல்ல. இல்லையென்றால் அரசு தரப்பு வழக்கையும், எதிர்தரப்பையும்அது பாதிக்கும்.
தனி நீதிமன்றம் முடிவு செய்யும்:
கடந்த 2002ம் ஆண்டு ஜனவரி மாதம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் தனி நீதிமன்றத்திறகு அளித்துள்ள வாய்ப்புமனுதாரருக்கு எதிராக செயல்படுத்தப்படும் என்று வழக்கஞர் ஜோதி தெரிவித்தார்.
அது தேவையற்றது. அந்த உத்தரவில், இவ்வழக்கை தனி நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டதாலும்வழக்கின் நிலை அந்த நீதிமன்றத்திற்கு தெரியும் என்பதாலும் தனி நீதிமன்றம் தான் தகுந்த முடிவை எடுக்க முடியும்என்றும்
தனி நீதிமன்றம் எந்த முடிவை எடுத்தாலும் அந்த முடிவு குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு மற்றும் சட்டப்படிஇருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
எனவே, இந்த உத்தரவில் மீண்டும் விளக்கம் தேவையில்லை. ஏனென்றால் தனி நீதிமன்றம் உட்பட எந்தநீதிமன்றத்திலும் விசாரணையில் உள்ள வழக்கின் மீது, குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவை பின்பற்றியேமுடிவெடுக்கப்படும் என்பதை சொல்லத் தேவையில்லை.
இத்துடன் இந்த மனு பைசல் செய்யப்படுகிறது என்றார்.
வழக்குகளை இணைக்கக் கோரி சிறிது காலம் பெங்களூரில் விசாரணையை இழுத்தடிக்க ஜெயலலிதா தரப்பில்நடந்த முயற்சி இந்தத் தீர்ப்பினால் முறியடிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications