பெட்ரால் விலை உயர்வு: ஜெ. கடும் கண்டனம்
சென்னை:
பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு பெருமளவில் உயர்த்தியுள்ளதற்கு முதல்வர் ஜெயலலிதா கடும்கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசு மக்களிடம் மிகக் கொடூரமாக நடந்து கொண்டுள்ளதாக அவர்வர்ணித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆளும் ஐக்கியமுற்போக்குக் கூட்டணி அரசு பெட்ரோல், டீசல் விலையை அதிக தடவைகள் உயர்த்தி, தான் படைத்தசாதனையை தானே முறியடித்து மீண்டும் சாதனை படைத்துள்ளது.
ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்று சொல்லிக் காள்ளும் தமிழகத்தைச் சேர்ந்த திமுக தலைமையிலானகூட்டணி இடம் பெற்றுள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, சற்றும் ஈவு இரக்கமோ, எந்தவித மனஉறுத்தலோ இல்லாமல் திரும்பத் திரும்ப மக்கள் மீது சுமைகைளை ஏற்றுவதிலேயே குறியாக இருப்பது போல்தோன்றுகிறது.
ஏழை, எளிய, சமூகத்தில் நலிவடைந்த பிரிவு மக்களைப் பாதிக்கக் கூடிய ஒரு பிரச்சினையில் தற்போது மத்தியில்ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசைப் போன்று இதுவரை எந்த ஒருஅரசும் இப்படியொரு கொடூரமான முறையிலும், அக்கறையற்ற விதத்திலும் நடந்து கொண்டதில்லை.
ஓராண்டு காலத்தில் பெட்ரோல், டீசல் விலை உயத்தப்படுவது இது நான்காவது முறையாகும். இந்த ஒலிம்பிக்சாதனையை வேறு எவராலும் முறியடிக்க முடியாது என்றே தோன்றுகிறது.
நமது நாட்டைச் சேர்ந்த ஏழை, எளிய மக்கள் ஒவ்வொருவரின் இதயத்திலும் இது என்றும் நீங்காமல் இருக்கும்.
அண்மையில் நடந்த காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி தேர்தலில் மக்கள் சரியான பாடம் கற்பித்தும், தங்களுடையகருத்தை தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறிய பிறகும், தமிழகத்தைச் சேர்ந்த 12 மத்திய அமைச்சர்களும் பதவிஆசையால்,
மக்களால் தாங்க முடியாத அளவுக்கு சுமை ஏற்றி இந்த டீசல் மற்றும் பெட்ரோல் விலை உயர்வுக்கு உடந்தையாகஇருந்து தமிழக மக்களுக்கு மீண்டும் துரோகம் இழைத்துள்ளனர்.
தங்களுக்கு வாக்களித்து ஆட்சியில் அமர வைத்த மக்களின் மீது சுமையை ஏற்றியதற்கு தமிழகத்தைச் சேர்ந்த 12மத்திய அமைச்ர்களுமே பொறுப்பாவர். மக்களின் முதுகெலும்பை முறிக்கிற சுமையை ஏற்றியதைத் தவிரஅவர்கள் கடந்த ஓர் ஆண்டில் சாதித்தது தான் என்ன?
பேருந்து கட்டணம் உயராது:
மாநில அரசுகள் அரசுப் போக்குவரத்துக் கழகங்களை நிர்வகிப்பது எவ்வாறு? ஓராண்டு காலத்தில் டீசலின் விலைலிட்டர் ஒன்றுக்கு 31.51 ரூபாயாக அதிகரித்துள்ளது.
இந்த பெருத்த இழப்பை சமாளிக்க வேண்டுமானால், எந்த ஒரு போக்குவரத்துக் கழகமும் பேருந்துக் கட்டணத்தைஉயர்த்தாமல் இருக்க முடியாது.
பேருந்துக் கட்டணத்தை திருத்தியமைக்க வேண்டிய கட்டாயத்தை மாநில அரசுக்கு ஏற்படுத்த வேண்டும்என்பதற்காகவே மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இவ்வாறு திரும்பத் திரும்ப டீசல் விலையைஉயர்த்தி வருகிறதோ என்று எண்ண வைக்கிறது.
அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு டீசல் விலை உயர்வு பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தியுள்ள போதிலும்,தமிழகத்தில் ஒரு போதும் பேருந்துக் கட்டணங்கள் உயர்த்தப்பட மாட்டாது என்பதையும், மாநில மக்கள்பாதுகாக்கப்படுவார்கள் என்பதையும் நான் உறுதி படத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications