மழை பெய்தால் தான் தண்ணீர் தருவோம்: கர்நாடகம்
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி:
கர்நாடகத்தில் போதிய மழை இல்லாத காரணத்தால் தான் காவிரியில் தண்ணீர் திறந்து விட முடியவில்லை என்றுகர்நாடக முதல்வர் தரம்சிங் கூறியுள்ளார்.
இந்த முறை மழை சரியில்லாத காரணத்தால் அணையிலிருந்து தண்ணீர் தர முடியவில்லை. மழை போதியஅளவில் இருந்தால் இந்த முறையும் தண்ணீர் கொடுப்போம்.
கர்நாடகத்தில் நடந்து வரும் முதல்வர் ஜெயலலிதா மீதான வழக்கு விசாரணைக்கு உரிய பாதுகாப்பு கொடுத்துவருகிறோம். எனவே ஜெயலலிதாவுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்று கூறுவது சரியில்லை.
ஒவ்வொரு முறை வழக்கு விசாரணைக்கு வரும்போதும் பலத்த பாதுகாப்பு அளித்து வருகிறோம் என்றார்தரம்சிங்.












Click it and Unblock the Notifications