கண்டதேவி: குமரி அனந்தன், டாக்டர் கிருஷ்ணசாமி கைது
திருச்சி/காரைக்குடி:
கண்டதேவி தேர்த் திருவிழாவில் கலந்து கொள்ள சென்ற புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முன்னாள்காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந் நிலையில் தேரோட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுப்பதற்காக டாக்டர் கிருஷ்ணசாமி இன்றுதிருச்சியிலிருந்து மதுரைக்குக் கிளம்பினார். அப்போது கிருஷ்ணசாமியையும், அவருடன் இருந்த 10 பேரையும் போலீஸார் கைதுசெய்தனர்.
இந்த கைதுக்கு கிருஷ்ணசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், தலித் மக்களின்உரிமை நிலைநாட்டப்பட வேண்டும், தேரோட்ட நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொள்ள ஏற்பாடுகள் செய்ய வேண்டும்,தலைவர்கள் யாரையும் கைது செய்யக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
ஆனால் அனைத்து உத்தரவுகளையும் காவல்துறை காற்றில் பறக்கவிட்டுள்ளது. ஆயிரக்கணக்கான தலித் மக்கள் தேரோட்டநிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் தடுக்கப்பட்டுள்ளனர் என்றார்.
இதேபோல கண்டதேவிக்கு செல்ல முயன்ற முன்னாள் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தனும் காரைக்குடியில் இன்று கைதுசெய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications