திருச்சி அருகே 3 பேர் வெட்டிக் கொலை

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி பகுதியில் பழிக்குப் பழியாக 3 பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புள்ளம்பாடியைச் சேர்ந்த நாராயணன் என்பவர் கடந்த 2001ம் ஆண்டு வெடிகுண்டு வீசிக் கொல்லப்பட்டார். மீன் பிடி குத்தகைதொடர்பாக ஏற்பட்ட தகராறில் நாராயணன் கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்த ஜானகி ராமன், கிருஷ்ணகுமார், ஆனந்த குமார் ஆகியோர் கைதாகி பின்னர்ஜாமீனில் வெளியே வந்தனர். இன்று நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக 3 பேரும் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது ஆலம்பாக்கம் என்ற இடத்தில் சிலர் அவர்களை வழிமறித்து அரிவாள், கத்தி, கம்பு போன்ற ஆயுதங்களால்சரமாரியாகத் தாக்கினர். இதில் நிலை குலைந்த 3 பேரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பிணமானார்கள்.

இந்த படுகொலைச் சம்பவம் புள்ளம்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாராயணனின் கொலைக்குப் பழிவாங்கவே இந்த மூன்று கொலைகளும் நடந்துள்ளதாகத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+