நுழைவுத் தேர்வு: அனைத்து வழக்குகளும் இன்று விசாரணை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நுழைவுத் தேர்வை எதிர்த்தும், ஆதரித்தும் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் இன்று (புதன்கிழமை) சென்னைஉயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

கடந்த 21 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நுழைவுத்தேர்வு அடிப்படையில் நடந்து வந்தது. இந்த நுழைவுத் தேர்வும், பின்னர் அறிமுகப்படுத்தப்பட்ட இம்ப்ரூவ்மென்ட் தேர்வும்இந்த ஆண்டு முதல் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதனால் பிளஸ் டூ தேர்வில் எடுத்த மதிப்பெண்களை கொண்டு மட்டுமே மாணவர்கள் மருத்துவம் அல்லது பொறியியல் படிப்பில்சேரமுடியும். இதை எதிர்த்து மருத்துவ நுழைவுத் தேர்வில் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்த நாமக்கல் மாணவர் அருண்குமார்உள்பட 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயர்நீதிமன்றத்திலும், மதுரை கிளையிலும் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

அதேசமயம், ஊரகப் பகுதி மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தான் இந்த ரத்து முடிவை தமிழக அரசு எடுத்துள்ளது.எனவே அரசின் முடிவுக்கு தடை விதிக்கக் கூடாது என்று கோரி பாமகவும் மனு செய்துள்ளது.

இந்த மனுக்கள் அனைத்தும் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ,நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் மனுக்களை விசாரிக்கவுள்ளனர். இந்த வழக்கில் அரசு சார்பில் மூத்த டெல்லி வழக்கறிஞர்பி.பி.ராவ் ஆஜராகிறார்.

இதற்கிடையே, நுழைவுத் தேர்வு ஏன் ரத்து செய்யப்பட்டது என்பது குறித்து தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் விளக்கம்அளித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு உயர் கல்வித்துறை செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி தாக்கல் செய்துள்ள விளக்க மனுவில்,

வருடா வருடம் 5 லட்சம் மாணவர்கள் பிளஸ் டூ தேர்வு எழுதுகிறார்கள். இவர்களில் 2.10 லட்சம் மாணவர்கள் கிராமப்புறப்பள்ளிகளில் படித்தவர்கள். அவர்கள் அதிக மதிப்பெண் எடுத்தாலும், தொழில் கல்லூரிகளில் அவர்களுக்கு இடம் கிடைப்பதுஅரிதாகவே இருந்து வந்தது. இதற்குக் காரணம் பொது நுழைவுத் தேர்வு முறைதான்.

நுழைவுத் தேர்வு எழுத சிறப்புப் பயிற்சி தேவைப்படுகிறது. இந்தப் பயிற்சியைப் பெற அவர்களுக்கு போதுமான வசதி இல்லை.இதனால் கிராமப்புற மாணவர்கள், நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற முடியவில்லை.

ஆனால் நகர்ப்புற மாணவர்கள் அதிக கட்டணம் செலுத்தி சிறப்புப் பயிற்சி மையங்களில் சேர்ந்து பயிற்சி பெற்று நுழைவுத் தேர்வுஎழுதி அதிக மதிப்பெண் பெறுகின்றனர். இதனால் நுழைவுத் தேர்வு கிராமப்புற மாணவர்களுக்கு பெரும் இடையூறாக உள்ளது.

கடந்த ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் கிராமப்புறங்களைச் சேர்ந்த 272 மாணவர்கள் மட்டுமே சேர்ந்தனர். மொத்தஇடங்கள் 1339. நகரங்களில் படித்த மாணவர்கள் தான் மருத்துவப் படிப்பில் பெரும்பாலான இடங்களில் சேருகின்றனர் என்பதுஇதன் மூலம் தெரிகிறது.

அரசின் தற்போதைய கொள்கை கிராமப்புற,ஏழை, எளிய மாணவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். பிளஸ் டூமாணவர்களுக்கு அரசு நடத்தும் பொதுத் தேர்வு மிகவும் கடினமானது. எனவே அத்தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்தான் அவர்களது திறனை நிர்ணயிக்கும் சரியான அளவுகோலாகும்.

பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவது கிராமப்புற பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள்தான். ஆனால் நுழைவுத் தேர்வுமுறை காரணமாக அவர்கள் தொழில் கல்லூரிகளில் சேரும் வாய்ப்பை இழந்து விடுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+