ஜெ. வழக்குகள்: வாதம் நாளைக்கு ஒத்தி வைப்பு
பெங்களூர்:
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மற்றும் லண்டன் ஹோட்டல் வழக்குகளை சேர்த்து விசாரிப்பதா அல்லது தனித்தனியாக விசாரிப்பதா என்பது குறித்த வாதத்தை நாளைக்கு ஒத்தி வைப்பதாக பெங்களூர் தனி நீதிமன்ற நீதிபதி பச்சாப்பூரேஇன்று அறிவித்தார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தவிர அவரது தோழி சசிகலா, சசிகலாவின் அக்காள் மகள் இளவரசி, சுதாகரன்ஆகியோரும், ஹோட்டல் வழக்கில் ஜெயலலிதா, தினகரன், ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த இரு வழக்குகளையும்சேர்த்து விசாரிக்க ஜெயலலிதா கோரி வருகிறார்.
இதுதொடர்பாக தனி நீதிமன்றத்தில் அவர் மனு செய்துள்ளார். அந்த மனு மீதான விசாரணை ஏற்கனவே முடிந்து விட்டது. இருவழக்குகளையும் எப்படி விசாரிக்க வேண்டும் என்பது குறித்து ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்குவிளக்கம் கேட்டு வருமாறு ஜெயலலிதா தரப்புக்கு தனி நீதிமன்ற நீதிபதி பச்சாப்பூரே அறிவுறுத்தியிருந்தார்.
இதையடுத்து இரு வழக்குகளையும் எப்படி விசாரிக்க வேண்டும் என்பதை விளக்குமாறு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில்இளவரசி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், இதுகுறித்து பெங்களூர் நீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும் என தீர்ப்பளித்தது.
இந் நிலையில் இன்று (புதன்கிழமை) பெங்களூர் நீதிமன்றத்தில், இரு வழக்குகளையும் சேர்த்து விசாரிப்பது குறித்த தனதுதீர்ப்பை அறிவிப்பதாக நீதிபதி பச்சாப்பூரே கூறியிருந்தார்.
இதன்படி, இன்று நீதிமன்றம் கூடியதும் அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா கூறுகையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் இளவரசிமுதலில் தாக்கல் செய்த மனுவின் மீதே தெளிவாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதாவது இரு வழக்குகள்குறித்து இனிமேல்உயர்நீதிமன்றத்தில் அணுக தேவையில்லை என்றும் அதை சம்பந்தப்பட்ட நீதிமன்றம் தான் முடிவு செய்யும் என்றும்தீர்ப்பளித்திருந்தது என்றார்.
அப்போது ஜெயலலிதாவின் வழக்கறிஞர் ஜோதி, இது தொடர்பாக தங்கள் தரப்பு வாதங்களையும் கேட்க வேண்டும் என்றார்.அதற்கு அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா, எதிர்த்தரப்பு வாதங்களை கேட்பது உங்கள் முடிவை பொறுத்தது என்றுநீதிபதியிடம் கூறினார்.
இதைத் தொடர்ந்து வாதத்தை நாளை கேட்பதாக நீதிபதி பச்சாப்பூரே அறிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications